• Sep 19 2024

இலங்கையில் பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை தொடர்பில் வெளியான அறிவிப்பு! samugammedia

Chithra / Jul 17th 2023, 6:55 am
image

Advertisement

இலங்கையில் பொதுத்துறை ஊழியர்களுக்கு அவர்களின் பணிமூப்பை, பாதிக்காத வகையில் நீண்ட கால விடுமுறையைப் பெறுவதற்கு அண்மையில் வழங்கப்பட்ட சலுகை பொது நிர்வாக அமைச்சினால் திருத்தப்பட்டுள்ளது.

தற்போது அரசுத் துறையில் பணிபுரிபவர்கள், விடுப்புக் காலத்திலும் பணி மூப்பு பெறுவார்கள் என்பதால், இந்த விதிமுறை நியாயமற்றது பணியில் உள்ள அதிகாரிகளின் முறைப்பாடு தெரிவித்திருந்தனர். இந்த முறைப்பாட்டையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஐந்தாண்டுகளுக்கு ஊதியம் இல்லாத விடுப்பு அளிக்கும் திட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டு, பணி மூப்பு சலுகையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் விடுப்பு பெறுவதால் ஓய்வூதியமும் பாதிக்கப்படாது.

இந்த விடயத்தில் பொருளாதார நிலைமையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை கருத்திற்கொண்டு பொதுத்துறை ஊழியர்களை வேலைக்காக வெளிநாடு செல்வதை ஊக்குவிக்கும் தேவை இனி தேவையில்லை என்பதையும் அமைச்சரவை கவனத்தில் எடுத்துள்ளது.

இதனால் இந்த ஆண்டு ஜூலை 11க்கு முன் எடுக்கப்பட்ட விடுப்புகளுக்கு புதிய சுற்றறிக்கை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மூலம் இந்த வசதி வழங்கப்பட்டது.

இதன்மூலம் பொதுத்துறை ஊழியர்களுக்கு விடுமுறையைப் பெற்று இலங்கை அல்லது வெளிநாட்டில் பணியாற்ற அனுமதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 2,000-க்கும் மேற்பட்ட பொதுத்துறை ஊழியர்கள் வெளி நாடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை தொடர்பில் வெளியான அறிவிப்பு samugammedia இலங்கையில் பொதுத்துறை ஊழியர்களுக்கு அவர்களின் பணிமூப்பை, பாதிக்காத வகையில் நீண்ட கால விடுமுறையைப் பெறுவதற்கு அண்மையில் வழங்கப்பட்ட சலுகை பொது நிர்வாக அமைச்சினால் திருத்தப்பட்டுள்ளது.தற்போது அரசுத் துறையில் பணிபுரிபவர்கள், விடுப்புக் காலத்திலும் பணி மூப்பு பெறுவார்கள் என்பதால், இந்த விதிமுறை நியாயமற்றது பணியில் உள்ள அதிகாரிகளின் முறைப்பாடு தெரிவித்திருந்தனர். இந்த முறைப்பாட்டையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஐந்தாண்டுகளுக்கு ஊதியம் இல்லாத விடுப்பு அளிக்கும் திட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டு, பணி மூப்பு சலுகையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் விடுப்பு பெறுவதால் ஓய்வூதியமும் பாதிக்கப்படாது.இந்த விடயத்தில் பொருளாதார நிலைமையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை கருத்திற்கொண்டு பொதுத்துறை ஊழியர்களை வேலைக்காக வெளிநாடு செல்வதை ஊக்குவிக்கும் தேவை இனி தேவையில்லை என்பதையும் அமைச்சரவை கவனத்தில் எடுத்துள்ளது.இதனால் இந்த ஆண்டு ஜூலை 11க்கு முன் எடுக்கப்பட்ட விடுப்புகளுக்கு புதிய சுற்றறிக்கை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மூலம் இந்த வசதி வழங்கப்பட்டது.இதன்மூலம் பொதுத்துறை ஊழியர்களுக்கு விடுமுறையைப் பெற்று இலங்கை அல்லது வெளிநாட்டில் பணியாற்ற அனுமதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் 2,000-க்கும் மேற்பட்ட பொதுத்துறை ஊழியர்கள் வெளி நாடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement