• Apr 26 2024

இலங்கை கடந்த மே, ஜூன் மாதம் போன்ற நெருக்கடிக்குள் சிக்குவதை தடுக்க முடியாது! ஜனாதிபதி எச்சரிக்கை

Chithra / Jan 28th 2023, 6:55 pm
image

Advertisement

அனுராதபுர காலத்தைப் போன்று யாருக்கும் தலைவணங்காத, கடனற்ற வலுவான நாட்டை உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

2022 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி -11% ஆக காணப்பட்டதாகவும் இவ்வருடம் அது -3.5% அல்லது -4.0 % வரை குறைவடையலாம் என ஜனாதிபதி தெரிவித்தார்.

எனினும் 2024 ஆம் ஆண்டு முதல் இதனை நேர்மறையான வளர்ச்சிக்கு கொண்டு செல்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களை எந்த வகையிலும் சீர்குலைத்தால் நாடு கடந்த மே மற்றும் ஜூன் மாதம் போன்ற நெருக்கடிக்குள் சிக்குவதை தடுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார மற்றும் விவசாய வேலைத்திட்டங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின்படி நாடுகளுடன் இணைந்து செயற்படுத்தப்படும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் இவ்வாறு சீர்குலைக்கப்படலாம் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை கடந்த மே, ஜூன் மாதம் போன்ற நெருக்கடிக்குள் சிக்குவதை தடுக்க முடியாது ஜனாதிபதி எச்சரிக்கை அனுராதபுர காலத்தைப் போன்று யாருக்கும் தலைவணங்காத, கடனற்ற வலுவான நாட்டை உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.அனுராதபுரத்தில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,2022 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி -11% ஆக காணப்பட்டதாகவும் இவ்வருடம் அது -3.5% அல்லது -4.0 % வரை குறைவடையலாம் என ஜனாதிபதி தெரிவித்தார்.எனினும் 2024 ஆம் ஆண்டு முதல் இதனை நேர்மறையான வளர்ச்சிக்கு கொண்டு செல்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களை எந்த வகையிலும் சீர்குலைத்தால் நாடு கடந்த மே மற்றும் ஜூன் மாதம் போன்ற நெருக்கடிக்குள் சிக்குவதை தடுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார மற்றும் விவசாய வேலைத்திட்டங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின்படி நாடுகளுடன் இணைந்து செயற்படுத்தப்படும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் இவ்வாறு சீர்குலைக்கப்படலாம் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement