• May 20 2024

144 வாக்குகளுடன் யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு தெரிவாகியது இலங்கை..! samugammedia

Chithra / Nov 16th 2023, 11:04 am
image

Advertisement

 

ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு இலங்கை 144 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

2023-27 காலகட்டத்திற்கான 58 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்புக்கான தேர்தல் 42 வது யுனெஸ்கோ பொது மாநாட்டில் நேற்று இடம்பெற்றது.

இந்த நிலையில் 188 உறுப்பு நாடுகளில் 144 வாக்குகளைப் பெற்று இலங்கை நிறைவேற்று சபையில் தனது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், ஒன்பது வேட்பாளர்களில் ஆறு பேர் யுனெஸ்கோ உறுப்பு நாடுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இலங்கை, பாகிஸ்தான், இந்தோனேஷியா, பங்களாதேஷ், கொரியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இப்பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளாகும்.

144 வாக்குகளுடன் யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு தெரிவாகியது இலங்கை. samugammedia  ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு இலங்கை 144 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.2023-27 காலகட்டத்திற்கான 58 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்புக்கான தேர்தல் 42 வது யுனெஸ்கோ பொது மாநாட்டில் நேற்று இடம்பெற்றது.இந்த நிலையில் 188 உறுப்பு நாடுகளில் 144 வாக்குகளைப் பெற்று இலங்கை நிறைவேற்று சபையில் தனது இடத்தைப் பெற்றுக்கொண்டது.ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், ஒன்பது வேட்பாளர்களில் ஆறு பேர் யுனெஸ்கோ உறுப்பு நாடுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இலங்கை, பாகிஸ்தான், இந்தோனேஷியா, பங்களாதேஷ், கொரியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இப்பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளாகும்.

Advertisement

Advertisement

Advertisement