• Jan 22 2025

சீனாவில் புதிய கொன்சுலர் அலுவலகம் - இலங்கைக்கு கிடைத்த 500 மில்லியன் யுவான் மானியம்

Chithra / Jan 22nd 2025, 12:11 pm
image

  

சீனாவில், Chengdu நகருக்கு அருகில் இலங்கை தூதரக அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சீன விஜயத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

எங்களுக்குத் தேவையான இடம் மற்றும் வசதிகளை இலவசமாகத் தருவதற்கு மாநிலத் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன்படி, வெளியுறவு அமைச்சகம் என்ற வகையில், எதிர்காலத்தில் Chengdu நகரில் புதிய தூதரக அலுவலகத்தைத் திறக்க வாய்ப்பு கிடைக்கும்.

ஜனாதிபதியின் சீன விஜயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது இருதரப்புக்கும் இடையில் பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் ஆழமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதியின் சீன விஜயத்துடன் இணைந்து அந்நாட்டுக்கு 500 மில்லியன் யுவான் மானியம் கிடைத்துள்ளது.

இந்நாட்டு மக்களின் நலனுக்காக இந்த மானியம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


சீனாவில் புதிய கொன்சுலர் அலுவலகம் - இலங்கைக்கு கிடைத்த 500 மில்லியன் யுவான் மானியம்   சீனாவில், Chengdu நகருக்கு அருகில் இலங்கை தூதரக அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சீன விஜயத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.எங்களுக்குத் தேவையான இடம் மற்றும் வசதிகளை இலவசமாகத் தருவதற்கு மாநிலத் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார்.அதன்படி, வெளியுறவு அமைச்சகம் என்ற வகையில், எதிர்காலத்தில் Chengdu நகரில் புதிய தூதரக அலுவலகத்தைத் திறக்க வாய்ப்பு கிடைக்கும்.ஜனாதிபதியின் சீன விஜயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது இருதரப்புக்கும் இடையில் பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் ஆழமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.இதேவேளை ஜனாதிபதியின் சீன விஜயத்துடன் இணைந்து அந்நாட்டுக்கு 500 மில்லியன் யுவான் மானியம் கிடைத்துள்ளது.இந்நாட்டு மக்களின் நலனுக்காக இந்த மானியம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement