இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு 45 வீத வரி விதிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசியின் விலை 150 ரூபாவிற்கு குறைவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த ஒரு கிலோ அரிசிக்கு 65 ரூபாய் வரி விதிக்கப்பட்டு, அதிகபட்ச சில்லறை விலையாக கிலோ ஒன்று 230 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்க ஆட்சிக்காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டபோது இறக்குமதி வரி கிலோ ஒன்றுக்கு இரண்டு முதல் பத்து ரூபாவாக காணப்பட்டதாகவும், மக்களுக்கு சலுகை விலையில் அரிசி விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் முதல் தடவையாக அரிசி கிலோ ஒன்றுக்கு 65 ரூபாய் அல்லது 45 வீத வரி அறவீடு செய்யப்படுவது தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழாகும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு 45 வீத வரி எதிர்க்கட்சி குற்றச்சாட்டு இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு 45 வீத வரி விதிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசியின் விலை 150 ரூபாவிற்கு குறைவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.எனினும் அந்த ஒரு கிலோ அரிசிக்கு 65 ரூபாய் வரி விதிக்கப்பட்டு, அதிகபட்ச சில்லறை விலையாக கிலோ ஒன்று 230 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த அரசாங்க ஆட்சிக்காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டபோது இறக்குமதி வரி கிலோ ஒன்றுக்கு இரண்டு முதல் பத்து ரூபாவாக காணப்பட்டதாகவும், மக்களுக்கு சலுகை விலையில் அரிசி விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.வரலாற்றில் முதல் தடவையாக அரிசி கிலோ ஒன்றுக்கு 65 ரூபாய் அல்லது 45 வீத வரி அறவீடு செய்யப்படுவது தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழாகும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.