• Sep 21 2024

இலங்கை – இந்திய எரிபொருள் குழாய் திட்டம்: ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பம்! samugammedia

Tamil nila / Jul 30th 2023, 2:40 pm
image

Advertisement

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எரிபொருள் விநியோக குழாய் திட்டத்திற்கான செயல்பாட்டு ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இந்த செயல்பாட்டின் ஆய்வை ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து அதற்கான ஒத்துழைப்பை முழுமையாக வழங்குவதாக ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க இந்தியாவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் தென் பகுதியின் நாகப்பட்டினத்தை அண்மித்த பிரதேசத்திலிருந்து இலங்கையை நோக்கி எரிபொருள் விநியோக குழாய் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

கடலுக்கு அடியில் முன்னெடுக்கப்பட உள்ள இந்த குழாய் திட்டமானது இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கை நோக்கி முதல் கட்டமாக விஸ்தரிக்கப்பட உள்ளது.

வடக்கில் மன்னார் மற்றும் வவுனியா வரையிலும், கிழக்கில் திருகோணமலை வரையிலும், இதன் பிரதான எரிபொருள் குழாய் கொழும்பு வரைக்கும் விஸ்தரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எரிபொருளை உள்வாங்குதல் மற்றும் விநியோகித்தல் ஆகிய இரு செயல்பாடுகளையும் உள்ளடக்கியதாக அமையப்பெறவுள்ள இலங்கை - இந்திய எரிபொருள் குழாய் திட்டத்திற்கான அனைத்து பூர்வாங்கல் நடவடிக்கைகளும் தற்போது நிறைவடைந்துள்ளன.

திட்டத்திற்கான செயல்பாட்டு ஆய்வை தொடர்ந்து முதல் கட்ட பணிகள் முன்னெடுக்கப்படும் என்று சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்தியாவினால் முன்மொழியப்பட்ட இந்த இணைப்பு திட்டமானது, 'அண்டைய நாடுகளுக்கு முதலிடம்' கொள்கை திட்டத்தில் ஆற்றல் வள இணைப்பு திட்டங்களை மையப்படுத்தியதாகும்.

ஏற்கனவே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல்வேறு துறைசார் ஒத்துழைப்புகள் காணப்படுகின்ற போதிலும், ஆற்றல் வளத்தை மையப்படுத்திய இவ்வாறான நேரடி இணைப்புகள் இல்லை.

அந்த வகையில், இலங்கை மாத்திரமன்றி இந்தியாவின் ஆற்றல் வள இணைப்பு திட்டத்திற்குள் பங்களாதேஷ், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்திற்காக சமீபத்திய ஆண்டுகளில் டெல்லி மேற்கொண்ட முயற்சிகளின் பிரகாரம் இந்தியாவை கேந்திரமாக கொண்ட ஆற்றல் வள கூட்டு இணைப்பு திட்டத்திற்கு பூட்டான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு மின் வர்த்தக ஒப்பந்தத்தின் வரைபு இறுதியாக்கப்பட்டுள்ளன .

இந்த ஒப்பந்தம் நேபாளம் மற்றும் பங்களாதேஷின் நீண்டகால கோரிக்கையை பூர்த்தி செய்யும் என்பதுடன் எல்லை கடந்த இணைப்புகள் ஊடாக இந்திய ஆற்றல் வள வர்த்தகத்தை ஊக்குவிப்பதாகவும் அமையும். 

அத்துடன் மறுப்புறம் இந்த ஆற்றல் வள இணைப்பு திட்டத்தின் ஊடாக மின்சாரத்தை கொள்வனவு செய்தல், விற்பணை செய்தல் மற்றும் மின் பரிமாற்றங்களில் பங்கேற்றல் ஆகிய துறைகளில் ஈடுப்பட ஒப்பந்தத்தின் பங்குதாரர்களுக்கு இந்தியா வாய்ப்பு அளிக்கிறது. ஆனால் எந்தவொரு சீன நிதியுதவியின் கீழ் உள்ள ஆற்றல் வள உற்பத்திகளை இந்திய இணைப்பு திட்டத்தின் மூலம் வர்த்தகம் செய்ய முடியாத வகையில் ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கை – இந்திய எரிபொருள் குழாய் திட்டம்: ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பம் samugammedia இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எரிபொருள் விநியோக குழாய் திட்டத்திற்கான செயல்பாட்டு ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இந்த செயல்பாட்டின் ஆய்வை ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பை தொடர்ந்து அதற்கான ஒத்துழைப்பை முழுமையாக வழங்குவதாக ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க இந்தியாவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.இந்தியாவின் தென் பகுதியின் நாகப்பட்டினத்தை அண்மித்த பிரதேசத்திலிருந்து இலங்கையை நோக்கி எரிபொருள் விநியோக குழாய் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.கடலுக்கு அடியில் முன்னெடுக்கப்பட உள்ள இந்த குழாய் திட்டமானது இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கை நோக்கி முதல் கட்டமாக விஸ்தரிக்கப்பட உள்ளது.வடக்கில் மன்னார் மற்றும் வவுனியா வரையிலும், கிழக்கில் திருகோணமலை வரையிலும், இதன் பிரதான எரிபொருள் குழாய் கொழும்பு வரைக்கும் விஸ்தரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.எரிபொருளை உள்வாங்குதல் மற்றும் விநியோகித்தல் ஆகிய இரு செயல்பாடுகளையும் உள்ளடக்கியதாக அமையப்பெறவுள்ள இலங்கை - இந்திய எரிபொருள் குழாய் திட்டத்திற்கான அனைத்து பூர்வாங்கல் நடவடிக்கைகளும் தற்போது நிறைவடைந்துள்ளன.திட்டத்திற்கான செயல்பாட்டு ஆய்வை தொடர்ந்து முதல் கட்ட பணிகள் முன்னெடுக்கப்படும் என்று சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் இந்தியாவினால் முன்மொழியப்பட்ட இந்த இணைப்பு திட்டமானது, 'அண்டைய நாடுகளுக்கு முதலிடம்' கொள்கை திட்டத்தில் ஆற்றல் வள இணைப்பு திட்டங்களை மையப்படுத்தியதாகும்.ஏற்கனவே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல்வேறு துறைசார் ஒத்துழைப்புகள் காணப்படுகின்ற போதிலும், ஆற்றல் வளத்தை மையப்படுத்திய இவ்வாறான நேரடி இணைப்புகள் இல்லை.அந்த வகையில், இலங்கை மாத்திரமன்றி இந்தியாவின் ஆற்றல் வள இணைப்பு திட்டத்திற்குள் பங்களாதேஷ், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.இந்த திட்டத்திற்காக சமீபத்திய ஆண்டுகளில் டெல்லி மேற்கொண்ட முயற்சிகளின் பிரகாரம் இந்தியாவை கேந்திரமாக கொண்ட ஆற்றல் வள கூட்டு இணைப்பு திட்டத்திற்கு பூட்டான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு மின் வர்த்தக ஒப்பந்தத்தின் வரைபு இறுதியாக்கப்பட்டுள்ளன .இந்த ஒப்பந்தம் நேபாளம் மற்றும் பங்களாதேஷின் நீண்டகால கோரிக்கையை பூர்த்தி செய்யும் என்பதுடன் எல்லை கடந்த இணைப்புகள் ஊடாக இந்திய ஆற்றல் வள வர்த்தகத்தை ஊக்குவிப்பதாகவும் அமையும். அத்துடன் மறுப்புறம் இந்த ஆற்றல் வள இணைப்பு திட்டத்தின் ஊடாக மின்சாரத்தை கொள்வனவு செய்தல், விற்பணை செய்தல் மற்றும் மின் பரிமாற்றங்களில் பங்கேற்றல் ஆகிய துறைகளில் ஈடுப்பட ஒப்பந்தத்தின் பங்குதாரர்களுக்கு இந்தியா வாய்ப்பு அளிக்கிறது. ஆனால் எந்தவொரு சீன நிதியுதவியின் கீழ் உள்ள ஆற்றல் வள உற்பத்திகளை இந்திய இணைப்பு திட்டத்தின் மூலம் வர்த்தகம் செய்ய முடியாத வகையில் ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement