• Nov 28 2024

இலங்கையில் வருகிறது புதிய சட்டம் - வீதிகளில் இனி குப்பை கொட்டினால் சிக்கல்

Chithra / Nov 24th 2024, 1:12 pm
image

 

வீதிகளில் குப்பைகளை இடுதல் மற்றும் எச்சில் உமிழ்தல் என்பவற்றுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

புத்தளம் பகுதியில் செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையைச் சுத்தமானதொரு நாடாக மாற்றுவதற்கு வீதிகளில் குப்பைகளை வீசுதல், வெற்றிலை எச்சிலை உமிழ்தல் போன்ற செயற்பாடுகளை மக்கள் தவிர்ப்பதுடன், அதனை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். 

எனவே, இவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பதற்குக் கடுமையான புதிய சட்டங்களை அரசாங்கம் கொண்டுவர வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.


இலங்கையில் வருகிறது புதிய சட்டம் - வீதிகளில் இனி குப்பை கொட்டினால் சிக்கல்  வீதிகளில் குப்பைகளை இடுதல் மற்றும் எச்சில் உமிழ்தல் என்பவற்றுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புத்தளம் பகுதியில் செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையைச் சுத்தமானதொரு நாடாக மாற்றுவதற்கு வீதிகளில் குப்பைகளை வீசுதல், வெற்றிலை எச்சிலை உமிழ்தல் போன்ற செயற்பாடுகளை மக்கள் தவிர்ப்பதுடன், அதனை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். எனவே, இவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பதற்குக் கடுமையான புதிய சட்டங்களை அரசாங்கம் கொண்டுவர வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement