• Sep 21 2024

பொதுமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் - ஜூலி சங் கோரிக்கை ! samugammedia

Tamil nila / Sep 30th 2023, 8:13 pm
image

Advertisement

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஊடாக பொதுமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை இலங்கை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டுமென அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் தொழில்நுட்ப துறையினர், சிவில் சமூகத்தினர் மற்றும் பலதரப்பட்ட நிபுணர்களின் கருத்தினை உள்வாங்குவது அவசியம் என அமெரிக்க தூதுவர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை சர்வதேச தரம் மற்றும் ஏனைய ஜனநாயக நாடுகளின் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப, திருத்தியமைக்க, இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுமாறும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் - ஜூலி சங் கோரிக்கை samugammedia இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஊடாக பொதுமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை இலங்கை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டுமென அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கோரிக்கை விடுத்துள்ளார்.இலங்கை அரசாங்கம் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் தொழில்நுட்ப துறையினர், சிவில் சமூகத்தினர் மற்றும் பலதரப்பட்ட நிபுணர்களின் கருத்தினை உள்வாங்குவது அவசியம் என அமெரிக்க தூதுவர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை சர்வதேச தரம் மற்றும் ஏனைய ஜனநாயக நாடுகளின் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப, திருத்தியமைக்க, இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுமாறும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement