• Nov 14 2024

குரங்கம்மை நோய் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும் இலங்கை

Chithra / Sep 10th 2024, 3:43 pm
image

 

குரங்கம்மை காய்ச்சல் நோய் தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

குரங்கம்மை நோய்த் தொற்று அறிகுறியுடன் இந்தியாவில் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த நபர்தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரது நோயின் தன்மை குறித்துத் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்தே வருவதால் குரங்கம்மை காய்ச்சல் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நோய் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருப்பதால் சமூகத்திற்கு நேரடியாகப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குரங்கம்மை நோய் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும் இலங்கை  குரங்கம்மை காய்ச்சல் நோய் தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.குரங்கம்மை நோய்த் தொற்று அறிகுறியுடன் இந்தியாவில் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த நபர்தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரது நோயின் தன்மை குறித்துத் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்நிலையில், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்தே வருவதால் குரங்கம்மை காய்ச்சல் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இந்த நோய் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருப்பதால் சமூகத்திற்கு நேரடியாகப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement