• Oct 04 2024

சேவைகளில் இருந்து விலகும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / Jan 22nd 2024, 9:31 am
image

Advertisement

சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் பேருந்து உரிமையாளர்களுக்கு அபராத பத்திரங்களை அனுப்பும் நடவடிக்கையை பொலிஸார் நடைமுறைப்படுத்தினால், தாம் சேவைகளில் இருந்து விலகியிருக்கப்போவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் அபராத பத்திரங்களை இன்று முதல் அனுப்ப பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 

பேருந்துகளின் தவறுகள் தொடர்பான அபராத பத்திரங்களை பேருந்தின் உரிமையாளருக்கு அனுப்பி வைப்பது நியாயமற்றது.

பேருந்து சங்கத்துடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி பொலிஸாரினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பேருந்து முன்னுரிமைப் பாதையை நடைமுறைப்படுத்தி, பேருந்துகளை இயக்க முறையான ஏற்பாடுகளைச் செய்தால், பேருந்து உரிமையாளர்கள் இந்த முன்மொழிவுக்கு உடன்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

சேவைகளில் இருந்து விலகும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விடுக்கப்பட்ட எச்சரிக்கை சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் பேருந்து உரிமையாளர்களுக்கு அபராத பத்திரங்களை அனுப்பும் நடவடிக்கையை பொலிஸார் நடைமுறைப்படுத்தினால், தாம் சேவைகளில் இருந்து விலகியிருக்கப்போவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் அபராத பத்திரங்களை இன்று முதல் அனுப்ப பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பேருந்துகளின் தவறுகள் தொடர்பான அபராத பத்திரங்களை பேருந்தின் உரிமையாளருக்கு அனுப்பி வைப்பது நியாயமற்றது.பேருந்து சங்கத்துடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி பொலிஸாரினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.பேருந்து முன்னுரிமைப் பாதையை நடைமுறைப்படுத்தி, பேருந்துகளை இயக்க முறையான ஏற்பாடுகளைச் செய்தால், பேருந்து உரிமையாளர்கள் இந்த முன்மொழிவுக்கு உடன்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement