• May 13 2024

தண்ணீருக்குப் பொலிஸ் பாதுகாப்பை பலப்படுத்திய நாடாக இலங்கை பதிவு..!samugammedia

Sharmi / Aug 9th 2023, 10:33 am
image

Advertisement

இலங்கையில் உள்ள குளங்கள், நீரேரிகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் சிலவற்றுக்குப் பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஆபிரிக்காவுக்கு வெளியே, தண்ணீருக்குப் பொலிஸ் பாதுகாப்பை பலப்படுத்திய நாடாக இலங்கை பதிவானது.

2023ஆம் ஆண்டு சர்வதேச அளவில் 'எல் நினோ' ஆண்டு என்று ஐக்கிய நாடுகள் சபை கடந்த சில மாதங்களுக்கு முன்னரே பகிரங்கப்படுத்தியது. மேற்கத்தேய நாடுகளும், துவாலு உள்ளிட்ட மிகச் சிறிய தீவு நாடுகளும் இதனால் கடும் பாதிப்புக்குட்படும் என்றும், பில்லியன் டொலரில் பொருளாதார இழப்பும், வெப்பச் சாவுகளும் ஏற்படலாம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை அபாய ஒலி எழுப் பியிருந்தது.

இந்த நிலையிலேயே, 'எல் நினோ' தாக்கம் இலங்கையில் தற்போது தாண்டவமாட ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் உள்ள பல குளங்களும், நீரேரிகளும், நீர்த்தேக்கங்களும் நாளுக்கு நாள் வரலாறு காணாத தண்ணீரின் இருப்பிழப்பைச் சந்தித்து வருகின்றன. மவுசாகல, காசல்ரீ, கொத்மலை, லக்ஸபான, பொல்பிட்டிய உள்ளிட்ட நீர்த்தேக்கங்கள் நீர் மட்டத்தை வெகுவாக இழந்துள்ளன.

பல நீர்த்தேக்கங்களில் இருந்து விவசாய நட வடிக்கைகளுக்குத் தண்ணீர் திறந்து விடப்படுவது விட்டுக் கொடுப்புக்களுக்கு இடமில்லா வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் பல நீர்த் தேக்கங்களிலிருந்து விவசாயத்துக்காகத் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால், விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரை உடன் திறந்துவிடவேண்டும் என்றும் இல்லாவிடில் நீர்த்தேக்கங்களில் இருந்து தன்னிச்சையாக தண்ணீர் எடுக்கப்படும் என்று விவசாய அமைப்புகள் பலவும் அரசாங்கத்துக்கு எச்சரித்துள்ளன.

இந்த நிலையிலேயே சில நீர்த்தேக்கங்கள் பொலிஸ் அதிரடிப் படையின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன. விவசாயிகள் விடுத்த அச்சுறுத்தல் காரணமாக சமனலவெவ நீர்த்தேக்கம் பொலிஸ் அதிரடிப்படை யின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்மூலம் இலங்கையின் வரலாற்றில் வறட்சியின் விளைவாக முதல் முறையாக இப்போதே தண்ணீருக்குப் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தண்ணீருக்குப் பொலிஸ் பாதுகாப்பை பலப்படுத்திய நாடாக இலங்கை பதிவு.samugammedia இலங்கையில் உள்ள குளங்கள், நீரேரிகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் சிலவற்றுக்குப் பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆபிரிக்காவுக்கு வெளியே, தண்ணீருக்குப் பொலிஸ் பாதுகாப்பை பலப்படுத்திய நாடாக இலங்கை பதிவானது.2023ஆம் ஆண்டு சர்வதேச அளவில் 'எல் நினோ' ஆண்டு என்று ஐக்கிய நாடுகள் சபை கடந்த சில மாதங்களுக்கு முன்னரே பகிரங்கப்படுத்தியது. மேற்கத்தேய நாடுகளும், துவாலு உள்ளிட்ட மிகச் சிறிய தீவு நாடுகளும் இதனால் கடும் பாதிப்புக்குட்படும் என்றும், பில்லியன் டொலரில் பொருளாதார இழப்பும், வெப்பச் சாவுகளும் ஏற்படலாம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை அபாய ஒலி எழுப் பியிருந்தது. இந்த நிலையிலேயே, 'எல் நினோ' தாக்கம் இலங்கையில் தற்போது தாண்டவமாட ஆரம்பித்துள்ளது.இலங்கையில் உள்ள பல குளங்களும், நீரேரிகளும், நீர்த்தேக்கங்களும் நாளுக்கு நாள் வரலாறு காணாத தண்ணீரின் இருப்பிழப்பைச் சந்தித்து வருகின்றன. மவுசாகல, காசல்ரீ, கொத்மலை, லக்ஸபான, பொல்பிட்டிய உள்ளிட்ட நீர்த்தேக்கங்கள் நீர் மட்டத்தை வெகுவாக இழந்துள்ளன.பல நீர்த்தேக்கங்களில் இருந்து விவசாய நட வடிக்கைகளுக்குத் தண்ணீர் திறந்து விடப்படுவது விட்டுக் கொடுப்புக்களுக்கு இடமில்லா வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் பல நீர்த் தேக்கங்களிலிருந்து விவசாயத்துக்காகத் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரை உடன் திறந்துவிடவேண்டும் என்றும் இல்லாவிடில் நீர்த்தேக்கங்களில் இருந்து தன்னிச்சையாக தண்ணீர் எடுக்கப்படும் என்று விவசாய அமைப்புகள் பலவும் அரசாங்கத்துக்கு எச்சரித்துள்ளன. இந்த நிலையிலேயே சில நீர்த்தேக்கங்கள் பொலிஸ் அதிரடிப் படையின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன. விவசாயிகள் விடுத்த அச்சுறுத்தல் காரணமாக சமனலவெவ நீர்த்தேக்கம் பொலிஸ் அதிரடிப்படை யின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.இதன்மூலம் இலங்கையின் வரலாற்றில் வறட்சியின் விளைவாக முதல் முறையாக இப்போதே தண்ணீருக்குப் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement