• Jun 26 2024

இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கிறது இலங்கை..! ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிவிப்பு samugammedia

Chithra / Oct 26th 2023, 3:02 pm
image

Advertisement

 

இந்தியாவுடனான உத்தேச பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) தொடர்பான 12 ஆவது சுற்று பேச்சுவார்த்தையை இலங்கை அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (ISFTA) விரிவுபடுத்துதல் மற்றும் ஆழமாக்குதல் தொடர்பில் இரு நாடுகளும் 2016 முதல் 2019 வரை 11 சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. 

இந்த விரிவான ஒப்பந்தம் தற்போதைய இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விட பரந்த நோக்கத்தைக் கொண்டுள்ளதாகவும் இது இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான பொருளாதார உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனூடாக விநியோக திறனை விரிவுபடுத்துதல் மற்றும் சந்தை அணுகலை விரிவுபடுத்துதல் ஆகிய இரண்டு முக்கிய கூறுகளுக்கு வலுவான முக்கியத்துவத்தை அரசாங்கம் அளிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கிறது இலங்கை. ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிவிப்பு samugammedia  இந்தியாவுடனான உத்தேச பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) தொடர்பான 12 ஆவது சுற்று பேச்சுவார்த்தையை இலங்கை அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.தற்போதைய இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (ISFTA) விரிவுபடுத்துதல் மற்றும் ஆழமாக்குதல் தொடர்பில் இரு நாடுகளும் 2016 முதல் 2019 வரை 11 சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இந்த விரிவான ஒப்பந்தம் தற்போதைய இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விட பரந்த நோக்கத்தைக் கொண்டுள்ளதாகவும் இது இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான பொருளாதார உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனூடாக விநியோக திறனை விரிவுபடுத்துதல் மற்றும் சந்தை அணுகலை விரிவுபடுத்துதல் ஆகிய இரண்டு முக்கிய கூறுகளுக்கு வலுவான முக்கியத்துவத்தை அரசாங்கம் அளிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement