மாலைதீவு கூடைப்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 'சுப்பர் கிண்ண' கூடைப்பந்து சுற்றுப்போட்டியில் இலங்கை விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து அணிகள் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இரு சம்பியன்ஷிப்களையும் வென்றன.
இந்நிலையில் பெண்கள் அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் பெண் வீரிங்கனையான பி.சிவானுஜாவும் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்குபற்றினார். இந்நிலையில் மாலைதீவினை எதிர்த்து போட்டியிட்ட இலங்கை அணி 74:72 என்ற எண்ணிக்கையில் மாலைதீவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மேலும் மாலைதீவின் மாலே நகரில் செப்டம்பர் 26 முதல் 30 வரை இந்தப் போட்டிகள் நடைபெற்றன. அந்தவகையில் நான்கு நாடுகளின் அணிகள், குறிப்பாக உலகின் வலிமையான வெளிநாட்டு கூடைப்பந்து வீரர்களுக்கிடையே இந்தப் போட்டி நடாத்தப்பட்டது.
இவ்வாறான நிலையில் இலங்கை அணிகள் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தன.
இத்தகைய பின்னணியில் போட்டியில் கலந்துகொண்ட பின்னர் இலங்கை அணிகள் நாட்டிற்கு திரும்பின. இலங்கை அணிகளை வரவேற்பதற்காக இலங்கை விமானப்படையின் கூடைப்பந்தாட்ட அணியின் தலைவர் விமானப்படை கொமடோர் அமல் பெரேரா உட்பட இலங்கை விமானப்படையின் உயர்மட்ட அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
'சுப்பர் கிண்ண' கூடைப்பந்து சுற்றுப்போட்டி- இலங்கை அணிக்கு பெருமை சேர்த்த யாழ். யுவதி மாலைதீவு கூடைப்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 'சுப்பர் கிண்ண' கூடைப்பந்து சுற்றுப்போட்டியில் இலங்கை விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து அணிகள் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இரு சம்பியன்ஷிப்களையும் வென்றன.இந்நிலையில் பெண்கள் அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் பெண் வீரிங்கனையான பி.சிவானுஜாவும் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்குபற்றினார். இந்நிலையில் மாலைதீவினை எதிர்த்து போட்டியிட்ட இலங்கை அணி 74:72 என்ற எண்ணிக்கையில் மாலைதீவை வீழ்த்தி வெற்றி பெற்றது.மேலும் மாலைதீவின் மாலே நகரில் செப்டம்பர் 26 முதல் 30 வரை இந்தப் போட்டிகள் நடைபெற்றன. அந்தவகையில் நான்கு நாடுகளின் அணிகள், குறிப்பாக உலகின் வலிமையான வெளிநாட்டு கூடைப்பந்து வீரர்களுக்கிடையே இந்தப் போட்டி நடாத்தப்பட்டது.இவ்வாறான நிலையில் இலங்கை அணிகள் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தன.இத்தகைய பின்னணியில் போட்டியில் கலந்துகொண்ட பின்னர் இலங்கை அணிகள் நாட்டிற்கு திரும்பின. இலங்கை அணிகளை வரவேற்பதற்காக இலங்கை விமானப்படையின் கூடைப்பந்தாட்ட அணியின் தலைவர் விமானப்படை கொமடோர் அமல் பெரேரா உட்பட இலங்கை விமானப்படையின் உயர்மட்ட அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.