• May 19 2024

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவர் நியமனம்!!

crownson / Dec 9th 2022, 11:58 am
image

Advertisement

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியும் பொறியியலாளருமான எஸ்.எம்.டி.எல்.கே.டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த வார தொடக்கத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவை உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கூறியதையடுத்து அல்விஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்..

கிங்ஸ்லி ரணவக்க தனது பதவியை இராஜினாமா செய்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கிங்ஸ்லி ரணவக்க தமக்கு அறிவிக்காமல் 'பார்க் அண்ட் ரைட் பஸ் சேவையை' இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தது உட்பட தன்னிச்சையான முடிவுகளை எடுத்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

அமைச்சர் குணவர்தன,  2005 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்க இலங்கை போக்குவரத்துச் சபைச் சட்டத்தின் பிரகாரம், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர் பதவிகளில் இருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்யுமாறு கிங்ஸ்லி ரணவக்கவை பணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவர் நியமனம் இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியும் பொறியியலாளருமான எஸ்.எம்.டி.எல்.கே.டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த வார தொடக்கத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவை உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கூறியதையடுத்து அல்விஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.கிங்ஸ்லி ரணவக்க தனது பதவியை இராஜினாமா செய்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.கிங்ஸ்லி ரணவக்க தமக்கு அறிவிக்காமல் 'பார்க் அண்ட் ரைட் பஸ் சேவையை' இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தது உட்பட தன்னிச்சையான முடிவுகளை எடுத்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.அமைச்சர் குணவர்தன,  2005 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்க இலங்கை போக்குவரத்துச் சபைச் சட்டத்தின் பிரகாரம், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர் பதவிகளில் இருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்யுமாறு கிங்ஸ்லி ரணவக்கவை பணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement