• Sep 21 2024

இலங்கை, பாகிஸ்தான் டெஸ்ட் : 4 ஆம் நாள் ஆட்டம் நிறைவு! samugammedia

Tamil nila / Jul 19th 2023, 7:22 pm
image

Advertisement

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற பாகிஸ்தான் அணிக்கு இன்றும் 83 ஓட்டங்கள் பெற வேண்டியுள்ளது.

போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்சில் 131 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுக்களை இழந்து 48 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 461 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி போட்டியின் நான்காம் நாளான இன்று சகல விக்கெட்டுகளையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சர்பாக Dhananjaya de Sliva 82 ஓட்டங்களையும் Nishan Madushka 64 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் Noman Ali, Abrar Ahmed ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்படி, பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 131 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் இறுதி நாளான நாளை 7 விக்கெட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில் பாகிஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.

இலங்கை, பாகிஸ்தான் டெஸ்ட் : 4 ஆம் நாள் ஆட்டம் நிறைவு samugammedia காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற பாகிஸ்தான் அணிக்கு இன்றும் 83 ஓட்டங்கள் பெற வேண்டியுள்ளது.போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்சில் 131 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுக்களை இழந்து 48 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றது.பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 461 ஓட்டங்களை பெற்றது.இதனையடுத்து தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி போட்டியின் நான்காம் நாளான இன்று சகல விக்கெட்டுகளையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றது.இலங்கை அணி சர்பாக Dhananjaya de Sliva 82 ஓட்டங்களையும் Nishan Madushka 64 ஓட்டங்களையும் பெற்றனர்.பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் Noman Ali, Abrar Ahmed ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இதன்படி, பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 131 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.போட்டியின் இறுதி நாளான நாளை 7 விக்கெட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில் பாகிஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement