• Dec 09 2024

இலங்கை மீண்டும் கடன் வலையில் வீழும் அபாயம் ...! பல்கலை பேராசிரியர் எச்சரிக்கை...!

Sharmi / Jun 29th 2024, 2:03 pm
image

இலங்கை மீண்டும் கடன் வலையில் வீழ்ந்துவிடும் அபாயம் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில்,

இம்மாதம் முதல் இருபத்தி இரண்டு நாட்களில் மாத்திரம் இலங்கை அரசாங்கம் உள்ளுர் திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரச் சந்தைகளில் இருந்து ஒரு இலட்சத்து பதினோராயிரத்து எழுநூற்று பதினான்கு கோடி ரூபா கடனாகப் பெற்றுள்ளதாகவும், இது அதிகம் எனவும் பேராசிரியர் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் மற்ற மாதங்களில் உள்ளூர் சந்தையில் இருந்து எடுக்கப்பட்ட கடன் தொகையுடன் ஒப்பிடும்போது இது அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக, இம்மாதம் முதல் இருபத்தி இரண்டு நாட்களில், எண்பத்தாறாயிரத்து நூற்று நாற்பது கோடி கருவூல உண்டியல்களும், முப்பத்தொன்பதாயிரத்து எழுபத்தைந்து கோடி கருவூலப் பத்திரங்களும் கடனாகப் பெறப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு, அரசாங்கம் உள்ளூர் சந்தையில் பிப்ரவரியில் எண்ணாயிரத்து எண்ணூற்று அறுபத்தைந்து கோடி ரூபாயும், மார்ச் மாதத்தில் அறுபத்து நான்காயிரத்து நூற்று நாற்பத்தி ஒன்பது கோடி ரூபாயும், மார்ச் மாதத்தில் எண்பத்தி நான்காயிரத்து முந்நூற்று இருபது கோடி ரூபாயும்,  ஏப்ரல் மாதத்தில் எழுபத்தி ஒன்பதாயிரத்து எழுநூற்று இருபத்தைந்து கோடி ரூபாய் என இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், உள்ளூர் சந்தையில் பெறப்பட்ட மொத்த கடன் தொகை முந்நூற்று எண்பத்து எட்டாயிரத்து அறுபத்தி இரண்டு கோடி ரூபாய்.

இந்த நிலையில் நாட்டின் கடன் சுமை அதிகரித்து கடன் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என பேராசிரியர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மீண்டும் கடன் வலையில் வீழும் அபாயம் . பல்கலை பேராசிரியர் எச்சரிக்கை. இலங்கை மீண்டும் கடன் வலையில் வீழ்ந்துவிடும் அபாயம் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.குறித்த செய்தியில்,இம்மாதம் முதல் இருபத்தி இரண்டு நாட்களில் மாத்திரம் இலங்கை அரசாங்கம் உள்ளுர் திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரச் சந்தைகளில் இருந்து ஒரு இலட்சத்து பதினோராயிரத்து எழுநூற்று பதினான்கு கோடி ரூபா கடனாகப் பெற்றுள்ளதாகவும், இது அதிகம் எனவும் பேராசிரியர் தெரிவித்தார். இந்த ஆண்டின் மற்ற மாதங்களில் உள்ளூர் சந்தையில் இருந்து எடுக்கப்பட்ட கடன் தொகையுடன் ஒப்பிடும்போது இது அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.இவ்வாறாக, இம்மாதம் முதல் இருபத்தி இரண்டு நாட்களில், எண்பத்தாறாயிரத்து நூற்று நாற்பது கோடி கருவூல உண்டியல்களும், முப்பத்தொன்பதாயிரத்து எழுபத்தைந்து கோடி கருவூலப் பத்திரங்களும் கடனாகப் பெறப்பட்டுள்ளன.இந்த ஆண்டு, அரசாங்கம் உள்ளூர் சந்தையில் பிப்ரவரியில் எண்ணாயிரத்து எண்ணூற்று அறுபத்தைந்து கோடி ரூபாயும், மார்ச் மாதத்தில் அறுபத்து நான்காயிரத்து நூற்று நாற்பத்தி ஒன்பது கோடி ரூபாயும், மார்ச் மாதத்தில் எண்பத்தி நான்காயிரத்து முந்நூற்று இருபது கோடி ரூபாயும்,  ஏப்ரல் மாதத்தில் எழுபத்தி ஒன்பதாயிரத்து எழுநூற்று இருபத்தைந்து கோடி ரூபாய் என இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், உள்ளூர் சந்தையில் பெறப்பட்ட மொத்த கடன் தொகை முந்நூற்று எண்பத்து எட்டாயிரத்து அறுபத்தி இரண்டு கோடி ரூபாய்.இந்த நிலையில் நாட்டின் கடன் சுமை அதிகரித்து கடன் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என பேராசிரியர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement