• May 03 2024

ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் இலங்கைக் குழந்தைகள்..! வெளியான அதிர்ச்சித் தகவல்..!samugammedia

Sharmi / Apr 21st 2023, 11:04 am
image

Advertisement

11000க்கும் மேற்பட்ட இலங்கை சிசுக்கள் ஐரோப்பாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இன்டர்போல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக் குழந்தைகளை விற்கும் மோசடியை நடத்தி வந்த மலேசிய தம்பதியரை அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் கைது செய்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளது.

60 முதல் 80 டொலர்களுக்கு இந்தக் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளன. மலேசிய கடவுச்சீட்டைக் கொண்ட இலங்கைக் குழந்தைகள் 6000 முதல் 8000 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, 4000 இலங்கை சிசுக்கள் நெதர்லாந்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இன்டர்போல் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த தகவலை நியூயார்க் டைம்ஸ் நாளிதழும் வெளியிட்டுள்ளது.

இதனிடையே மலேசியா மெயில் நாளிதழ் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

கடத்தலில் ஈடுபட்ட தம்பதிகள் இலங்கைக் குழந்தைகளுக்கான மலேசிய கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்கச் சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் இலங்கைக் குழந்தைகள். வெளியான அதிர்ச்சித் தகவல்.samugammedia 11000க்கும் மேற்பட்ட இலங்கை சிசுக்கள் ஐரோப்பாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இன்டர்போல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கைக் குழந்தைகளை விற்கும் மோசடியை நடத்தி வந்த மலேசிய தம்பதியரை அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் கைது செய்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளது. 60 முதல் 80 டொலர்களுக்கு இந்தக் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளன. மலேசிய கடவுச்சீட்டைக் கொண்ட இலங்கைக் குழந்தைகள் 6000 முதல் 8000 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, 4000 இலங்கை சிசுக்கள் நெதர்லாந்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இன்டர்போல் மேலும் தெரிவித்துள்ளது. இந்த தகவலை நியூயார்க் டைம்ஸ் நாளிதழும் வெளியிட்டுள்ளது. இதனிடையே மலேசியா மெயில் நாளிதழ் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.கடத்தலில் ஈடுபட்ட தம்பதிகள் இலங்கைக் குழந்தைகளுக்கான மலேசிய கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்கச் சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement