• Oct 28 2024

இலங்கையில் அத்துமீறி தங்கும் சுற்றுலாப்பயணிகளுக்கு எச்சரிக்கை - தம்பதியினர் கைது..!

Chithra / Oct 27th 2024, 8:13 am
image

Advertisement

 

விசா காலம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருக்கும் ரஷ்ய, உக்ரைன் மற்றும் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளை உடனடியாக நாடு கடத்த தீர்மானித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் குறித்த தீர்மானத்தை செயற்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் தென்பகுதி கரையோரங்களுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகள் சிலரே இவ்வாறு விசா காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் 30 நாள் சுற்றுலா விசாவையே பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை விசா இன்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டு தம்பதியை கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக ஹந்தான பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 39 மற்றும் 32 வயதுடை ரஷ்ய பிரஜைகள் என்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் அத்துமீறி தங்கும் சுற்றுலாப்பயணிகளுக்கு எச்சரிக்கை - தம்பதியினர் கைது.  விசா காலம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருக்கும் ரஷ்ய, உக்ரைன் மற்றும் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளை உடனடியாக நாடு கடத்த தீர்மானித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் குறித்த தீர்மானத்தை செயற்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், இலங்கையின் தென்பகுதி கரையோரங்களுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகள் சிலரே இவ்வாறு விசா காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கைக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் 30 நாள் சுற்றுலா விசாவையே பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை விசா இன்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டு தம்பதியை கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக ஹந்தான பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் 39 மற்றும் 32 வயதுடை ரஷ்ய பிரஜைகள் என்பது தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement