• May 03 2024

இலங்கையர்களான தந்தை மற்றும் மகள் நோர்வே தேர்தலில் வெற்றி..! samugammedia

Chithra / Sep 23rd 2023, 7:45 am
image

Advertisement

நோர்வே - ஒஸ்லோ தேர்தல்களில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தந்தையும், மகளும் வெற்றி பெற்றுள்ளனர்.

தந்தையும் மகளும் இருவேறு பிரதான கட்சிகளின் சார்பில் முறையே கன்சர்வேட்டிவ் கட்சியிலும், தொழிலாளர் கட்சியிலும் களமிறங்கி  வெற்றி பெற்றுள்ளனர்.

உத்தியோகபூர்வமான தேர்தல் முடிவுகளை அடுத்து, அனீஸ் ரவூப் மற்றும் அவரது மகளான தமீனா செரிப்டீன் ரவூப் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, தனது தேர்தல் வெற்றி குறித்து, தொழிலாளர் கட்சியில் போட்டியிட்ட தமீனா கருத்து தெரிவிக்கையில்,

“நான் ஒஸ்லோவை இன்னும் சிறந்த, பாதுகாப்பான மற்றும் பசுமையான நகரமாக மாற்றுவதற்கு போராடுவதற்கு பெரிய திட்டங்களை வைத்திருக்கிறேன்” மேலும், எனக்கு வாக்ளித்த சகலருக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நோர்வே தொழிலாளர் கட்சியின் ஆலோசகராகவும் தமீனா பணியாற்றி வரும் நிலையில், எதிர்வரும் காலங்களில் நோர்வேயின் முதல் வெளிநாட்டு பிரதமராக வரவேண்டும் எனவும் சமூக வாழ்த்து தெரிவிக்கப்பட்டு வருகின்றது.


இலங்கையர்களான தந்தை மற்றும் மகள் நோர்வே தேர்தலில் வெற்றி. samugammedia நோர்வே - ஒஸ்லோ தேர்தல்களில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தந்தையும், மகளும் வெற்றி பெற்றுள்ளனர்.தந்தையும் மகளும் இருவேறு பிரதான கட்சிகளின் சார்பில் முறையே கன்சர்வேட்டிவ் கட்சியிலும், தொழிலாளர் கட்சியிலும் களமிறங்கி  வெற்றி பெற்றுள்ளனர்.உத்தியோகபூர்வமான தேர்தல் முடிவுகளை அடுத்து, அனீஸ் ரவூப் மற்றும் அவரது மகளான தமீனா செரிப்டீன் ரவூப் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.இதேவேளை, தனது தேர்தல் வெற்றி குறித்து, தொழிலாளர் கட்சியில் போட்டியிட்ட தமீனா கருத்து தெரிவிக்கையில்,“நான் ஒஸ்லோவை இன்னும் சிறந்த, பாதுகாப்பான மற்றும் பசுமையான நகரமாக மாற்றுவதற்கு போராடுவதற்கு பெரிய திட்டங்களை வைத்திருக்கிறேன்” மேலும், எனக்கு வாக்ளித்த சகலருக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை நோர்வே தொழிலாளர் கட்சியின் ஆலோசகராகவும் தமீனா பணியாற்றி வரும் நிலையில், எதிர்வரும் காலங்களில் நோர்வேயின் முதல் வெளிநாட்டு பிரதமராக வரவேண்டும் எனவும் சமூக வாழ்த்து தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement