• Nov 26 2024

கறுப்பு சந்தையை ஆரம்பித்துள்ள இலங்கை அரசு..! ஆனந்த பாலித பகிரங்க குற்றச்சாட்டு

Chithra / Jan 4th 2024, 1:01 pm
image

 

ஜனவரி முதலாம் திகதி புதிய பெறுமதி சேர் வரியை நடைமுறைப்படுத்தியன் மூலம் அரசாங்கம் கறுப்புச் சந்தையை ஆரம்பித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த தொழிற்சங்க அழைப்பாளரும் பேச்சாளருமான ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் டிசம்பர் 31 ஆம் திகதி இறுதிக்குள் மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும்.

எனினும் ஜனவரி முதலாம் திகதி காலை 5 மணிக்கு மின்துறை அமைச்சர் திருத்தப்பட்ட எரிபொருள் விலையை அறிவித்தார்.

எனவே, இது விலை திருத்தம் அல்ல, எரிபொருளுக்கான வரியைச் சுரண்டும் வசூல். கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் இருப்புக்கள், 

முன்னைய விலை மற்றும் இலங்கை ரூபாவின் உயர்வைக் கருத்தில் கொண்டு ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை குறைந்தபட்சம் 15 ரூபாவால் குறைக்கப்பட வேண்டும்.

எனினும் தற்போது அது உயர்த்தப்பட்டுள்ளதாக பாலித சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு சமையல் எரிவாயு விலையை பொறுத்தவரையில், இதன் விலையை 495 ரூபாயினால் குறைத்திருக்கவேண்டும். 

எனினும் அது 685 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

கறுப்பு சந்தையை ஆரம்பித்துள்ள இலங்கை அரசு. ஆனந்த பாலித பகிரங்க குற்றச்சாட்டு  ஜனவரி முதலாம் திகதி புதிய பெறுமதி சேர் வரியை நடைமுறைப்படுத்தியன் மூலம் அரசாங்கம் கறுப்புச் சந்தையை ஆரம்பித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த தொழிற்சங்க அழைப்பாளரும் பேச்சாளருமான ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் டிசம்பர் 31 ஆம் திகதி இறுதிக்குள் மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும்.எனினும் ஜனவரி முதலாம் திகதி காலை 5 மணிக்கு மின்துறை அமைச்சர் திருத்தப்பட்ட எரிபொருள் விலையை அறிவித்தார்.எனவே, இது விலை திருத்தம் அல்ல, எரிபொருளுக்கான வரியைச் சுரண்டும் வசூல். கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் இருப்புக்கள், முன்னைய விலை மற்றும் இலங்கை ரூபாவின் உயர்வைக் கருத்தில் கொண்டு ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை குறைந்தபட்சம் 15 ரூபாவால் குறைக்கப்பட வேண்டும்.எனினும் தற்போது அது உயர்த்தப்பட்டுள்ளதாக பாலித சுட்டிக்காட்டியுள்ளார்.உள்நாட்டு சமையல் எரிவாயு விலையை பொறுத்தவரையில், இதன் விலையை 495 ரூபாயினால் குறைத்திருக்கவேண்டும். எனினும் அது 685 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement