• May 20 2024

தலைவரின் மகள் துவாரகாவை தேடும் இலங்கை அரசாங்கம்..! ரணிலுக்கு எச்சரிக்கை..! samugammedia

Chithra / May 8th 2023, 5:14 pm
image

Advertisement

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் எங்கே என்பது குறித்து இதுவரையில் தெரியவில்லை என்றும், இலங்கை அரசாங்கம் அவர்களை காணாமல் போனவர்கள் பட்டியிலில் வைத்துள்ளதாக ஓய்வுபெற்ற இந்திய இராணுவ அதிகாரி, புவி அரசியல் ஆய்வாளர் மேஜர் மதன்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவை இலங்கையின் குற்றப்புலனாய்வு தேடிவருகின்ற நிலையில் மதன்குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் கொல்லப்பட்டது தெரியும், இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தெரியும், எனினும் அவரது மனைவி மற்றும் மகள் எங்கே என்பது இதுவரையில் தெரியவில்லை.

காணாமல்போனோர் பட்டியலில் தான் அவர்கள் உள்ளனர். எனவே அவர்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கிறது. இப்படியான சூழலில் விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கான சாத்தியம் இருப்பதாக ஏற்கனவே ஆராய்ந்துள்ளோம்.

இதற்கான சாத்தியம் இருக்கும் சந்தர்ப்பத்தில் இதனால் நேரடியாக பாதிக்கப்படுவதற்கு இலங்கையில் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கமே என சுட்டிக்காட்டியுள்ளார்.

தலைவரின் மகள் துவாரகாவை தேடும் இலங்கை அரசாங்கம். ரணிலுக்கு எச்சரிக்கை. samugammedia தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் எங்கே என்பது குறித்து இதுவரையில் தெரியவில்லை என்றும், இலங்கை அரசாங்கம் அவர்களை காணாமல் போனவர்கள் பட்டியிலில் வைத்துள்ளதாக ஓய்வுபெற்ற இந்திய இராணுவ அதிகாரி, புவி அரசியல் ஆய்வாளர் மேஜர் மதன்குமார் தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவை இலங்கையின் குற்றப்புலனாய்வு தேடிவருகின்ற நிலையில் மதன்குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் கொல்லப்பட்டது தெரியும், இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தெரியும், எனினும் அவரது மனைவி மற்றும் மகள் எங்கே என்பது இதுவரையில் தெரியவில்லை.காணாமல்போனோர் பட்டியலில் தான் அவர்கள் உள்ளனர். எனவே அவர்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கிறது. இப்படியான சூழலில் விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கான சாத்தியம் இருப்பதாக ஏற்கனவே ஆராய்ந்துள்ளோம்.இதற்கான சாத்தியம் இருக்கும் சந்தர்ப்பத்தில் இதனால் நேரடியாக பாதிக்கப்படுவதற்கு இலங்கையில் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கமே என சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement