• Nov 26 2024

பூட்டான் நாட்டு இளம் பெண்ணைக் கத்தியால் குத்திக் கொலை செய்த இலங்கையர்..! அவுஸ்திரேலியாவில் பயங்கரம்..!

Chithra / Dec 19th 2023, 6:20 pm
image

பூட்டான் நாட்டு இளம் பெண்ணைக் கத்தியால் குத்திக் கொலை செய்த இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்பரா மிருகக்காட்சிசாலையில் உள்ள சமையலறைக் களஞ்சிய அறையில் இளம் பெண்ணான சக ஊழியரையே குறித்த இலங்கையர்  கத்தியால் குத்திக் கொன்றதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இச் சம்பவத்தில் பூட்டான் நாட்டைச் சேர்ந்த 29 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இக்  கொலை குற்றச்சாட்டில் 29 வயதான ஜூட் விஜேசிங்க என்ற இலங்கையைச் சேர்ந்த சமையல்காரர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். 


கொலை சம்பவத்தின் பின்னர் ஜூட் விஜேசிங்க தனக்குத்தானே கத்தியால் குத்தியுள்ளதாகவும் இவரது உடம்பில் சில காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில் அவர் காயங்களுடன் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


இந் நிலையில் குறித்த இலங்கையருக்கு பிணை வழங்க அந்நாட்டு நீதிமன்றம்  மறுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண் தேசிய மிருகக்காட்சிசாலை மற்றும் மீன்வளத்தில் உள்ள வணிக சமையலறையில் மதியம் 12.50 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.


அதன் பின் மதியம் 2 மணியளவில் ஓக்ஸ் தோட்டத்திலுள்ள விஜேசிங்கவின் அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்த பொலிசார் பல மணி போராட்டத்தின் பின் அவரை கைது செய்துள்ளனர்.

குறித்த இலங்கையர் ' சுமார்  இரண்டு வருடங்களாக இங்கே இருக்கிறார்' என குடியிருப்பாளர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.


விஜேசிங்க தேசிய மிருகக்காட்சிசாலை மற்றும் மீன்வளத்தின் ஒரு பகுதியான ஜமாலா வனவிலங்கு விடுதியில் சமையல்காரராக இருந்து வருகின்றார்.

அவரது சமையல் படைப்புகளின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் தவறாமல் பகிர்ந்து வந்துள்ளார்.

அவர் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

பூட்டான் நாட்டு இளம் பெண்ணைக் கத்தியால் குத்திக் கொலை செய்த இலங்கையர். அவுஸ்திரேலியாவில் பயங்கரம். பூட்டான் நாட்டு இளம் பெண்ணைக் கத்தியால் குத்திக் கொலை செய்த இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.கன்பரா மிருகக்காட்சிசாலையில் உள்ள சமையலறைக் களஞ்சிய அறையில் இளம் பெண்ணான சக ஊழியரையே குறித்த இலங்கையர்  கத்தியால் குத்திக் கொன்றதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இச் சம்பவத்தில் பூட்டான் நாட்டைச் சேர்ந்த 29 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.இக்  கொலை குற்றச்சாட்டில் 29 வயதான ஜூட் விஜேசிங்க என்ற இலங்கையைச் சேர்ந்த சமையல்காரர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கொலை சம்பவத்தின் பின்னர் ஜூட் விஜேசிங்க தனக்குத்தானே கத்தியால் குத்தியுள்ளதாகவும் இவரது உடம்பில் சில காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் காயங்களுடன் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இந் நிலையில் குறித்த இலங்கையருக்கு பிணை வழங்க அந்நாட்டு நீதிமன்றம்  மறுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.கொலை செய்யப்பட்ட பெண் தேசிய மிருகக்காட்சிசாலை மற்றும் மீன்வளத்தில் உள்ள வணிக சமையலறையில் மதியம் 12.50 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.அதன் பின் மதியம் 2 மணியளவில் ஓக்ஸ் தோட்டத்திலுள்ள விஜேசிங்கவின் அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்த பொலிசார் பல மணி போராட்டத்தின் பின் அவரை கைது செய்துள்ளனர்.குறித்த இலங்கையர் ' சுமார்  இரண்டு வருடங்களாக இங்கே இருக்கிறார்' என குடியிருப்பாளர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.விஜேசிங்க தேசிய மிருகக்காட்சிசாலை மற்றும் மீன்வளத்தின் ஒரு பகுதியான ஜமாலா வனவிலங்கு விடுதியில் சமையல்காரராக இருந்து வருகின்றார்.அவரது சமையல் படைப்புகளின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் தவறாமல் பகிர்ந்து வந்துள்ளார்.அவர் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement