• May 19 2024

வெளிநாடொன்றின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராக பதவியேற்ற இலங்கையர்..!

Chithra / Nov 30th 2023, 7:47 am
image

Advertisement

 

சீசெல்ஸ் நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரண்டு புதிய வதிவிடமற்ற நீதியரசர்கள் பதவியேற்றுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் மொரீசியஸை சேர்ந்த கருணா குணேஸ் பாலகி என்பவரும் இலங்கையைச் சேர்ந்த ஜனக் டி சில்வா ஆகியவர்களே நீதியரசராக பதவியேற்றுள்ளனர்.

தமது நாட்டிற்கு வெளியே வித்தியாசமான அனுபவங்களைப் பெறுவதற்கும் இது ஒரு வாய்ப்பாக இதனை தாம் பார்ப்பதாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் நீதிபதி ஜனக் டி சில்வா கூறியுள்ளார்.

டி சில்வா இலங்கையின் உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக பதவி வகித்துள்ளதுடன் இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராகவும் பதவி வகித்துள்ளார்.

சீஷெல்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றமானது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் தலைமை நீதியரசர் உட்பட ஐந்து மேல்முறையீட்டு நீதியரசர்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடொன்றின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராக பதவியேற்ற இலங்கையர்.  சீசெல்ஸ் நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரண்டு புதிய வதிவிடமற்ற நீதியரசர்கள் பதவியேற்றுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இந்நிலையில் மொரீசியஸை சேர்ந்த கருணா குணேஸ் பாலகி என்பவரும் இலங்கையைச் சேர்ந்த ஜனக் டி சில்வா ஆகியவர்களே நீதியரசராக பதவியேற்றுள்ளனர்.தமது நாட்டிற்கு வெளியே வித்தியாசமான அனுபவங்களைப் பெறுவதற்கும் இது ஒரு வாய்ப்பாக இதனை தாம் பார்ப்பதாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் நீதிபதி ஜனக் டி சில்வா கூறியுள்ளார்.டி சில்வா இலங்கையின் உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக பதவி வகித்துள்ளதுடன் இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராகவும் பதவி வகித்துள்ளார்.சீஷெல்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றமானது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் தலைமை நீதியரசர் உட்பட ஐந்து மேல்முறையீட்டு நீதியரசர்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement