• May 19 2024

தயார் நிலையில் இலங்கை கடற்படையினர்..! இலங்கை மக்களுக்கு வெளியான அறிவிப்பு samugammedia

Chithra / Sep 30th 2023, 11:18 am
image

Advertisement

 

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிவாரண குழுக்கள் விழிப்புடன் இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில், தென் மாகாணத்தின் பல பகுதிகளில் அனர்த்த நிவாரணக் குழுக்களை அனுப்பவும், திடீர் வெள்ளம் ஏற்பட்டால் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், அவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்தத்திலிருந்து மீட்பதற்காக, தென் கடற்படை கட்டளை தலா ஒரு நிவாரணக் குழுவாக காலி, அக்குரஸ்ஸ, அத்துரலிய மற்றும் தவலம ஆகிய பகுதிகளுக்கும் கம்புருபிட்டிய பகுதிக்கு இரண்டு நிவாரணக் குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இதேவேளை, வெள்ள அபாயத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் மேலதிக நிவாரண குழுக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது.

தயார் நிலையில் இலங்கை கடற்படையினர். இலங்கை மக்களுக்கு வெளியான அறிவிப்பு samugammedia  சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிவாரண குழுக்கள் விழிப்புடன் இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில், தென் மாகாணத்தின் பல பகுதிகளில் அனர்த்த நிவாரணக் குழுக்களை அனுப்பவும், திடீர் வெள்ளம் ஏற்பட்டால் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், அவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், அனர்த்தத்திலிருந்து மீட்பதற்காக, தென் கடற்படை கட்டளை தலா ஒரு நிவாரணக் குழுவாக காலி, அக்குரஸ்ஸ, அத்துரலிய மற்றும் தவலம ஆகிய பகுதிகளுக்கும் கம்புருபிட்டிய பகுதிக்கு இரண்டு நிவாரணக் குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன.இதேவேளை, வெள்ள அபாயத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் மேலதிக நிவாரண குழுக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement