• Nov 24 2024

பொதுநலவாய மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து அதிகாரிகள் செல்ல அனுமதி

Chithra / Oct 22nd 2024, 1:41 pm
image

 

பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான விஜித ஹேரத் இன்றைய தினம்  தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 24ம் திகதி சேமோவாவில் பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவோ, பிரதமரோ அல்லது தாமோ பங்கேற்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்காக வெளிவிவகார அமைச்சு மற்றும் லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கு கொள்ளச் செய்வதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பொதுநலவாய மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து அதிகாரிகள் செல்ல அனுமதி  பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான விஜித ஹேரத் இன்றைய தினம்  தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 24ம் திகதி சேமோவாவில் பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெறவுள்ளது.இந்த மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவோ, பிரதமரோ அல்லது தாமோ பங்கேற்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்றத் தேர்தலை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.எனினும் அதற்காக வெளிவிவகார அமைச்சு மற்றும் லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கு கொள்ளச் செய்வதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement