• Nov 18 2024

இலங்கை பாராளுமன்றம் ஒரு வேடிக்கைக்குரிய இடமே - உமா சந்திர பிரகாஷ் காட்டம்..!

Tamil nila / Mar 8th 2024, 6:37 pm
image

இலங்கை பாராளுமன்றம் எந்த ஒரு நாட்டு நலன் தொடர்பான விடயங்களும் பேசப்படாத  வேடிக்கைக்குரிய இடமாக இருக்கும் நிலையில் அங்கிருந்த ஆளும்  தரப்பினர் உள்ளிட்டோர் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸாவை கேலி செய்வதாக ஐக்கிய மாக்கள் சக்தியின் உறுப்பினர் உமாச்சந்திர பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

வடக்கு கிழக்கு மலையகத்தில் இருக்க கூடிய பெண்கள் தொடர்பாக பேசுவதற்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் எங்களிடம் இல்லை. எங்களினுடைய பெண்களினுடைய பிரச்சினைகளை பார்க்கும் போது மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்திருக்கிறது. 

வடக்கு என்பது போதைப்பொருள் கடத்தும் இடமாக மாறி வருகிறது. குறிப்பாக பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள், பெண் குழந்தைகள், இளம் பெண்களை இலக்கு வைத்து போதைப்பொருள் அதிகமாக புழக்கத்தில் விடப்படுகிறது. 

இதற்கு மேலதிகமாக நாங்கள் சொல்கின்றோம். வடக்கிலே  52 சதவீதமானவர்களாக பெண்கள் இருக்கிறார்கள் என்றும் வாக்களிக்க கூடியவர்கள் 55 வீதமானவர்கள் இருக்கிறார்கள்.  பாராளுமன்றத்துக்கு அனுப்புவது ஆண்களை. அந்த ஆண்கள் பாராளுமன்றத்துக்கு சென்று பெண்கள் சம்பந்தமான விடயங்களை பற்றி பேசுகிறார்களா? 

பொருளாதாரத்துக்கு உழைக்க கூடிய மத்திய கிழக்கிற்கு செல்லக்கூடிய வீட்டு பணியாளர்களினுடைய நலந்திட்டங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசப்படுகிறதா? அல்லது இந்த நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொடுக்க கூடிய நாளாந்த வருமானம், அவர்களினுடைய துன்பங்கள், அவர்களினுடைய சலுகைகள் தொடர்பாக ஏதாவது ஒரு விடயம் பாராளுமன்றத்தில் பேசப்படுகிறதா? 

அத்துடன் 30 வருட கால யுத்தத்தின் பின்னர் பெண்தலைமைக் குடும்பங்களின் சிறப்பு திட்டங்கள் பற்றி கூறப்படுகிறதா? , யுத்தத்தில் காணாமல் ஆக்கபட்டவர்களின் ஆக்கபூர்வமான முடிவுகளை அரசு அறிவிக்கிறதா?. இவையெல்லாம்  கடந்து பாராளுமன்றம் வினோதமான வேடிக்கையான இடமாக இருக்கிறது. இதில் எங்களுடைய தலைவர் தொடர்பாக கருத்துக்களை  கூறி கேலிக்கு உள்ளாக்குகிறார்கள். 

ஐக்கிய மக்கள் சக்தியை பொறுத்த வரையில் அன்று தொடக்கம் இன்று வரை நாங்கள் மக்கள் நலம் சார்ந்திருக்கின்றோம். கொரோனா காலத்தில் கூட வடக்கு மாத்திரமல்ல ஏனைய மாவட்டங்களுக்கும் வைத்தியசாலை உபகரணங்களை வழங்கியிருந்தார். 

பாடசாலை உபகரணங்கள், பாடசாலை பஸ் வண்டிகளை  தொடர்ச்சியாக வழங்கி வருகிறார். ஆனால் இதற்கு பணம் எங்கே என்று கேட்கிறார்கள். நாங்களும் அந்த பணத்தை கொண்டு ஆயிரக்கணக்கான மக்களை கொண்டு வந்து ஒரு கண் காட்சி போன்று கூட்டங்களை நடத்த முடியும். அது சார்ந்து சிந்திக்க கூடிய ஒரு தலைவராக மக்களினுடைய நலம் சார்ந்து சிந்திக்க கூடிய ஒரு தலைவராக அவரினுடைய வழிகாட்டலில் நாங்கள் செயற்பட்டு கொண்டிருக்கின்றோம்.  - என தெரிவித்துள்ளார்.

இலங்கை பாராளுமன்றம் ஒரு வேடிக்கைக்குரிய இடமே - உமா சந்திர பிரகாஷ் காட்டம். இலங்கை பாராளுமன்றம் எந்த ஒரு நாட்டு நலன் தொடர்பான விடயங்களும் பேசப்படாத  வேடிக்கைக்குரிய இடமாக இருக்கும் நிலையில் அங்கிருந்த ஆளும்  தரப்பினர் உள்ளிட்டோர் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸாவை கேலி செய்வதாக ஐக்கிய மாக்கள் சக்தியின் உறுப்பினர் உமாச்சந்திர பிரகாஷ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மலையகத்தில் இருக்க கூடிய பெண்கள் தொடர்பாக பேசுவதற்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் எங்களிடம் இல்லை. எங்களினுடைய பெண்களினுடைய பிரச்சினைகளை பார்க்கும் போது மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்திருக்கிறது. வடக்கு என்பது போதைப்பொருள் கடத்தும் இடமாக மாறி வருகிறது. குறிப்பாக பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள், பெண் குழந்தைகள், இளம் பெண்களை இலக்கு வைத்து போதைப்பொருள் அதிகமாக புழக்கத்தில் விடப்படுகிறது. இதற்கு மேலதிகமாக நாங்கள் சொல்கின்றோம். வடக்கிலே  52 சதவீதமானவர்களாக பெண்கள் இருக்கிறார்கள் என்றும் வாக்களிக்க கூடியவர்கள் 55 வீதமானவர்கள் இருக்கிறார்கள்.  பாராளுமன்றத்துக்கு அனுப்புவது ஆண்களை. அந்த ஆண்கள் பாராளுமன்றத்துக்கு சென்று பெண்கள் சம்பந்தமான விடயங்களை பற்றி பேசுகிறார்களா பொருளாதாரத்துக்கு உழைக்க கூடிய மத்திய கிழக்கிற்கு செல்லக்கூடிய வீட்டு பணியாளர்களினுடைய நலந்திட்டங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசப்படுகிறதா அல்லது இந்த நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொடுக்க கூடிய நாளாந்த வருமானம், அவர்களினுடைய துன்பங்கள், அவர்களினுடைய சலுகைகள் தொடர்பாக ஏதாவது ஒரு விடயம் பாராளுமன்றத்தில் பேசப்படுகிறதா அத்துடன் 30 வருட கால யுத்தத்தின் பின்னர் பெண்தலைமைக் குடும்பங்களின் சிறப்பு திட்டங்கள் பற்றி கூறப்படுகிறதா , யுத்தத்தில் காணாமல் ஆக்கபட்டவர்களின் ஆக்கபூர்வமான முடிவுகளை அரசு அறிவிக்கிறதா. இவையெல்லாம்  கடந்து பாராளுமன்றம் வினோதமான வேடிக்கையான இடமாக இருக்கிறது. இதில் எங்களுடைய தலைவர் தொடர்பாக கருத்துக்களை  கூறி கேலிக்கு உள்ளாக்குகிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தியை பொறுத்த வரையில் அன்று தொடக்கம் இன்று வரை நாங்கள் மக்கள் நலம் சார்ந்திருக்கின்றோம். கொரோனா காலத்தில் கூட வடக்கு மாத்திரமல்ல ஏனைய மாவட்டங்களுக்கும் வைத்தியசாலை உபகரணங்களை வழங்கியிருந்தார். பாடசாலை உபகரணங்கள், பாடசாலை பஸ் வண்டிகளை  தொடர்ச்சியாக வழங்கி வருகிறார். ஆனால் இதற்கு பணம் எங்கே என்று கேட்கிறார்கள். நாங்களும் அந்த பணத்தை கொண்டு ஆயிரக்கணக்கான மக்களை கொண்டு வந்து ஒரு கண் காட்சி போன்று கூட்டங்களை நடத்த முடியும். அது சார்ந்து சிந்திக்க கூடிய ஒரு தலைவராக மக்களினுடைய நலம் சார்ந்து சிந்திக்க கூடிய ஒரு தலைவராக அவரினுடைய வழிகாட்டலில் நாங்கள் செயற்பட்டு கொண்டிருக்கின்றோம்.  - என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement