• May 19 2024

நச்சு வாயுவினையே சுவாசிக்கும் இலங்கை மக்கள்- வெளியான அதிர்ச்சித் தகவல்!

Sharmi / Jan 11th 2023, 2:57 pm
image

Advertisement

பாரிய சவால்களுக்கு மத்திலும் சுதேச மருத்துவத் துறை மீண்டும் எழுச்சிபெற்று வருவதாக பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சுதேச மருத்துவத்துறை அமைச்சின் புதிய செயலி மற்றும் இணையத்தளம் ஒன்றை ஆரம்பிக்கின்ற அறிமுக விழா நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.


கொவிட் தொற்று வேகமாக பரவிய காலத்தில் கொத்தமல்லி பானத்தை அருந்துமாறு மேற்கத்திய வைத்தியர்களும் கூட கூறியிருந்ததாகவும், சுதேச மருத்துவத் துறை மக்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியுள்ளதாக தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டிருந்தார்.

பாரிய சவால்களுக்கு மத்தியில்  சுதேச மருத்துவத் துறை மீண்டும் எழுச்சிபெற்று வருகிறது. கொவிட் தொற்றுநோய் காலப்பகுதியில் பல வைத்தியசாலைகளில் சுதேச மருத்துவத் துறை மிகவும் வெற்றிகரமாக சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டது.  

ஒரு கஸ்டமான காலத்தில் சுதேச விடயங்களை மதிப்பதும் அந்த கஸ்டத்திலிருந்து எழுந்ததும் வெளிநாட்டுப் பொருட்களைத் தேடிச் செல்வதும் எமது நாட்டில் பழக்கப்பட்டுப் போன ஒரு நடைமுறையாகும். இதுவே காலங்காலமாக எமக்குப் பழக்கப்பட்ட ஒன்று.

ஆனால் இன்று தொழில்நுட்ப வடிவமைப்பாளர்கள், இளைஞர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆயுர்வேத துறையின் பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து இந்தத் தடையை உடைத்து முன்னேறி வருகின்றனர். தகவல் தொழிநுட்பத்துடன் கைகோர்த்து எமது சுதேச வைத்தியர்களின் தகவல் வளங்களை சேகரித்து அதன் மூலம் பயனடைய விரும்பும் மக்களுக்கு வழங்குவது சிறப்பான ஒரு நடவடிக்கையாகும்.

இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்கள் அனைவரும் சிகிச்சை பெறுவதற்கு முன் அதுபற்றிய பல்வேறு விடயங்களை தெறிந்துகொள்ள முடியும். ஆயுர்வேத மருத்துவமானது பல நூற்றாண்டுகளாக எம்முடன் இணைந்த சுதேச மருத்துவமாகும். சூழல் அழிவடைந்து வருகிறது. நாம் நச்சு வாயுவினையே சுவாசிக்கின்றோம். எமது உணவு முறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மருந்து வகைகளில் இருந்து உருவாகும் மோசமான நிலைமைகள் பற்றி உலகம் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கும் காலம் இது.

எமது ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அதுனுடன் இணைந்த யோகா முறைமை போன்ற பல்வேறு வகையான முறைமைகள் குறித்து உலகம் வேகமாக கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறது. இது முழு வைத்தியத் துறைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

நச்சு வாயுவினையே சுவாசிக்கும் இலங்கை மக்கள்- வெளியான அதிர்ச்சித் தகவல் பாரிய சவால்களுக்கு மத்திலும் சுதேச மருத்துவத் துறை மீண்டும் எழுச்சிபெற்று வருவதாக பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.சுதேச மருத்துவத்துறை அமைச்சின் புதிய செயலி மற்றும் இணையத்தளம் ஒன்றை ஆரம்பிக்கின்ற அறிமுக விழா நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றிருந்தது.இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.கொவிட் தொற்று வேகமாக பரவிய காலத்தில் கொத்தமல்லி பானத்தை அருந்துமாறு மேற்கத்திய வைத்தியர்களும் கூட கூறியிருந்ததாகவும், சுதேச மருத்துவத் துறை மக்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியுள்ளதாக தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டிருந்தார்.பாரிய சவால்களுக்கு மத்தியில்  சுதேச மருத்துவத் துறை மீண்டும் எழுச்சிபெற்று வருகிறது. கொவிட் தொற்றுநோய் காலப்பகுதியில் பல வைத்தியசாலைகளில் சுதேச மருத்துவத் துறை மிகவும் வெற்றிகரமாக சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டது.  ஒரு கஸ்டமான காலத்தில் சுதேச விடயங்களை மதிப்பதும் அந்த கஸ்டத்திலிருந்து எழுந்ததும் வெளிநாட்டுப் பொருட்களைத் தேடிச் செல்வதும் எமது நாட்டில் பழக்கப்பட்டுப் போன ஒரு நடைமுறையாகும். இதுவே காலங்காலமாக எமக்குப் பழக்கப்பட்ட ஒன்று.ஆனால் இன்று தொழில்நுட்ப வடிவமைப்பாளர்கள், இளைஞர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆயுர்வேத துறையின் பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து இந்தத் தடையை உடைத்து முன்னேறி வருகின்றனர். தகவல் தொழிநுட்பத்துடன் கைகோர்த்து எமது சுதேச வைத்தியர்களின் தகவல் வளங்களை சேகரித்து அதன் மூலம் பயனடைய விரும்பும் மக்களுக்கு வழங்குவது சிறப்பான ஒரு நடவடிக்கையாகும்.இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்கள் அனைவரும் சிகிச்சை பெறுவதற்கு முன் அதுபற்றிய பல்வேறு விடயங்களை தெறிந்துகொள்ள முடியும். ஆயுர்வேத மருத்துவமானது பல நூற்றாண்டுகளாக எம்முடன் இணைந்த சுதேச மருத்துவமாகும். சூழல் அழிவடைந்து வருகிறது. நாம் நச்சு வாயுவினையே சுவாசிக்கின்றோம். எமது உணவு முறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மருந்து வகைகளில் இருந்து உருவாகும் மோசமான நிலைமைகள் பற்றி உலகம் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கும் காலம் இது.எமது ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அதுனுடன் இணைந்த யோகா முறைமை போன்ற பல்வேறு வகையான முறைமைகள் குறித்து உலகம் வேகமாக கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறது. இது முழு வைத்தியத் துறைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement