• May 17 2024

பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் இலங்கை விமானிகள் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! samugammedia

Chithra / Jun 29th 2023, 10:54 am
image

Advertisement

விமானிகள் பற்றாக்குறை மற்றும் சேவையிலுள்ள விமானிகளுக்கு போதியளவு சம்பளம் வழங்கப்படாமை குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை விமானிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் குறித்து இலங்கை விமானிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானிகள் பற்றாக்குறையால் இலங்கை விமான சேவை பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விமான சேவை முகாமைத்துவத்தினால் முன்னெடுக்கப்படும் சில தீர்மானங்களினால் விமானிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை விமான சேவைக்கு 330 விமானிகள் தேவைப்படுகின்றனர்.

எவ்வாறிருப்பினும் கடந்த ஆண்டு 70 இக்கும் மேற்பட்ட விமானிகள் சேவையிலிருந்து இடை விலகியமையால் தற்போது விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக உரிய நேரத்தில் சேவைகளை முன்னெடுப்பதில் எழுந்துள்ள சிக்கலால், விமான பயணிகளான மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இம்முறை இலங்கை விமான சேவை 50 மில்லியன் டொலர் இலாபமீட்டியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

எனவே, தற்போது நிலவும் விமானிகள் பற்றாக்குறை மற்றும் சேவையிலுள்ள விமானிகளுக்கான சம்பளம் தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இலங்கை விமானிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் இலங்கை விமானிகள் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை samugammedia விமானிகள் பற்றாக்குறை மற்றும் சேவையிலுள்ள விமானிகளுக்கு போதியளவு சம்பளம் வழங்கப்படாமை குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை விமானிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.இந்த விடயம் குறித்து இலங்கை விமானிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானிகள் பற்றாக்குறையால் இலங்கை விமான சேவை பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.விமான சேவை முகாமைத்துவத்தினால் முன்னெடுக்கப்படும் சில தீர்மானங்களினால் விமானிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது இலங்கை விமான சேவைக்கு 330 விமானிகள் தேவைப்படுகின்றனர்.எவ்வாறிருப்பினும் கடந்த ஆண்டு 70 இக்கும் மேற்பட்ட விமானிகள் சேவையிலிருந்து இடை விலகியமையால் தற்போது விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக உரிய நேரத்தில் சேவைகளை முன்னெடுப்பதில் எழுந்துள்ள சிக்கலால், விமான பயணிகளான மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.மேலும், இம்முறை இலங்கை விமான சேவை 50 மில்லியன் டொலர் இலாபமீட்டியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.எனவே, தற்போது நிலவும் விமானிகள் பற்றாக்குறை மற்றும் சேவையிலுள்ள விமானிகளுக்கான சம்பளம் தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இலங்கை விமானிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement