• Apr 30 2024

ஓமன் வளைகுடாவில் இலங்கையர்கள் பயணித்த கப்பல் கவிழ்ந்து விபத்து..!

Tamil nila / Apr 17th 2024, 10:22 pm
image

Advertisement

ஓமன் வளைகுடாவில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடும் புயல் காரணமாக, இலங்கையர்கள் பயணித்த கப்பலொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

 குறித்த கப்பலில் பயணித்த, 21 இலங்கைப் பணியாளர்களை ஈரானிய மீட்புக் குழுவினர் காப்பாற்றியுள்ளதாக அந்த நாட்டின் அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

 குறிப்பாக குக் தீவுகளின் கொடியுடன் எண்ணெய் ஏற்றிச் சென்ற குறித்த கப்பல், தெற்கு நகரமான ஜாஸ்கில் இருந்து சுமார் 50 கிலோ மீற்றர் தொலைவில் கவிழ்ந்துள்ளது. 

 கப்பலில் பயணித்தவர்களை மீட்பதற்கு குறித்த பகுதிக்கு மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்ட நிலையில், 21 பணியாளர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக ஜாஸ்க் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் நிர்வாகத்தின் இயக்குனர் மொஹமட் அமீன் அமானி தெரிவித்துள்ளார்.

ஓமன் வளைகுடாவில் இலங்கையர்கள் பயணித்த கப்பல் கவிழ்ந்து விபத்து. ஓமன் வளைகுடாவில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடும் புயல் காரணமாக, இலங்கையர்கள் பயணித்த கப்பலொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கப்பலில் பயணித்த, 21 இலங்கைப் பணியாளர்களை ஈரானிய மீட்புக் குழுவினர் காப்பாற்றியுள்ளதாக அந்த நாட்டின் அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  குறிப்பாக குக் தீவுகளின் கொடியுடன் எண்ணெய் ஏற்றிச் சென்ற குறித்த கப்பல், தெற்கு நகரமான ஜாஸ்கில் இருந்து சுமார் 50 கிலோ மீற்றர் தொலைவில் கவிழ்ந்துள்ளது.  கப்பலில் பயணித்தவர்களை மீட்பதற்கு குறித்த பகுதிக்கு மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்ட நிலையில், 21 பணியாளர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக ஜாஸ்க் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் நிர்வாகத்தின் இயக்குனர் மொஹமட் அமீன் அமானி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement