• Nov 26 2024

பிரித்தானிய தேர்தலில் களமிறங்கும் இலங்கை தமிழ் பெண்- புலம்பெயர் தமிழர்கள் பெருமிதம்!

Tamil nila / Jun 24th 2024, 8:26 pm
image

யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட கிருஷ்ணி ரிஷிகரன் பிரித்தானியாவின் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில்  போட்டியிடுகிறார்.

இந்த சம்பவம் புலம்பெயர் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 20 வருடமாக சட்டன் பகுதியில் வசித்துவரும் கிருஷ்ணி ரிஷிகரன் சட்டன் மற்றும் செம் ஆகியவற்றிற்கான நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுகிறார்.

சட்டன் மற்றும் செம் ஆகியவை தனது சிறுவயது வாழ்விடமாக இருந்ததாக கூறும் அவர், தான் புனித.பிலோமினா பாடசாலையில் கல்வி கற்றதையும் இந்தச் சமுதாயத்தில் வளர்ந்து வந்ததையும் நினைவுகளாக மீட்டுப் பார்ப்பதாக கூறுகிறார்.

ஒரு குடும்பமாக தாம் பல போராட்டங்களை எதிர்கொண்டாலும், இங்குள்ள சமூகத்தின் ஆதரவே தான் இன்று இந்த நிலைக்கு வர உதவியதாக கிருஷ்ணி ரிஷிகரன் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத் தொழிலைத் தொடர்ந்து, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மாற்றும் பிரித்தானியாவின் முன்னணித் தொண்டு நிறுவனத்தில் இப்போது பணிபுரியும் கிருஷ்ணி ரிஷிகரன், கவுன்சிலராக இருந்து, மக்கள் எதிர்நோக்கும் வீட்டுப் பிரச்சனைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துகிறார்.

இந்நிலையில் தாராளவாத சனநாயகக் கட்சியுடன் கூட்டணி வைத்த பழமைவாத அரசாங்கமானது கடந்த 14 ஆண்டுகாலத்தில் பிரித்தானியாவை பலவீனப்படுத்தியுள்ளதாக அவர் கூட்டிக் காட்டியுள்ளார்.


பிரித்தானிய தேர்தலில் களமிறங்கும் இலங்கை தமிழ் பெண்- புலம்பெயர் தமிழர்கள் பெருமிதம் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட கிருஷ்ணி ரிஷிகரன் பிரித்தானியாவின் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில்  போட்டியிடுகிறார்.இந்த சம்பவம் புலம்பெயர் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 20 வருடமாக சட்டன் பகுதியில் வசித்துவரும் கிருஷ்ணி ரிஷிகரன் சட்டன் மற்றும் செம் ஆகியவற்றிற்கான நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுகிறார்.சட்டன் மற்றும் செம் ஆகியவை தனது சிறுவயது வாழ்விடமாக இருந்ததாக கூறும் அவர், தான் புனித.பிலோமினா பாடசாலையில் கல்வி கற்றதையும் இந்தச் சமுதாயத்தில் வளர்ந்து வந்ததையும் நினைவுகளாக மீட்டுப் பார்ப்பதாக கூறுகிறார்.ஒரு குடும்பமாக தாம் பல போராட்டங்களை எதிர்கொண்டாலும், இங்குள்ள சமூகத்தின் ஆதரவே தான் இன்று இந்த நிலைக்கு வர உதவியதாக கிருஷ்ணி ரிஷிகரன் குறிப்பிட்டுள்ளார்.சட்டத் தொழிலைத் தொடர்ந்து, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மாற்றும் பிரித்தானியாவின் முன்னணித் தொண்டு நிறுவனத்தில் இப்போது பணிபுரியும் கிருஷ்ணி ரிஷிகரன், கவுன்சிலராக இருந்து, மக்கள் எதிர்நோக்கும் வீட்டுப் பிரச்சனைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துகிறார்.இந்நிலையில் தாராளவாத சனநாயகக் கட்சியுடன் கூட்டணி வைத்த பழமைவாத அரசாங்கமானது கடந்த 14 ஆண்டுகாலத்தில் பிரித்தானியாவை பலவீனப்படுத்தியுள்ளதாக அவர் கூட்டிக் காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement