இலங்கையில் நல்லிணக்கத்திற்கான சாதகமான சூழலை உருவாக்க, புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் மக்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் பின்பற்றுவதைத் தவிர்க்குமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மனித உரிமை குற்றச்சாட்டுகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கைத் தமிழ் மக்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் பின்பற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
இந்நிலையில், காசாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் மேற்குலக நாடுகள் தமது இரட்டை நிலைப்பாட்டை காட்டி வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச சட்டங்களில் கடுமையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலை கைவிட வேண்டும் அலி சப்ரி கோரிக்கை இலங்கையில் நல்லிணக்கத்திற்கான சாதகமான சூழலை உருவாக்க, புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் மக்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் பின்பற்றுவதைத் தவிர்க்குமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இலங்கையின் மனித உரிமை குற்றச்சாட்டுகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கைத் தமிழ் மக்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் பின்பற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.இந்நிலையில், காசாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் மேற்குலக நாடுகள் தமது இரட்டை நிலைப்பாட்டை காட்டி வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.சர்வதேச ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச சட்டங்களில் கடுமையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.