• Apr 30 2024

நிரந்தர விசாவை கோரி ஆயிரம் கிலோமீற்றர் நடைபயணத்தை மேற்கொண்ட இலங்கை தமிழர்! அவுஸ்திரேலியா வழங்கிய இனிப்பான செய்தி! samugammedia

Chithra / Sep 12th 2023, 5:06 pm
image

Advertisement

அவுஸ்திரேலியாவில் நிரந்தர விசாவை கோரி பலரட்டிலிருந்து சிட்னியில் பிரதமர் அலுவலகம் வரை நடைபயணத்தை மேற்கொண்ட இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் நெய்ல்  பராவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவுஸ்திரேலியா நிரந்தர விசா வழங்கியுள்ளது.

பிரிட்ஜிங் விசாவினால் சிக்குண்டுள்ள அகதிகளிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் நியாயமான பதிலை வழங்கவேண்டும் என கோரி நெய்ல் பரா நடைபயணத்தை மேற்கொண்டிருந்தார்

அவர் அவுஸ்திரேலியாவில் தனது குடும்பத்தவர்களுடன்  பிரிட்ஜிங் விசாவில் வசித்துவருகின்றார்.

பரா தனது நடைபயணத்தை முடிவை நெருங்கிக்கொண்டிருந்தவேளை விசா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது - சட்டத்தரணி கரினா போர்ட் இதனை தெரிவித்துள்ளார்.

நான் மகிழ்ச்சியும் நன்றியும் உடையவனுமாக உள்ளேன் என பரா தெரிவித்துள்ளார்.

நன்றி அவுஸ்திரேலியா இது எனது நாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2012 இல் படகு மூலம் அவுஸ்திரேலியா வந்த பரா தனது மனைவி இரண்டு பிள்ளைகளுடன் பாதுகாப்பு கோரியிருந்தார்.

நாங்கள் அனைவரும் ஒருநாள் விடுதலையாவோம் என நம்புகின்றோம் நாங்கள் அவுஸ்திரேலியாவிற்கு பங்களிப்பு செய்வோம் என உறுதியளிக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நிரந்தர விசாவை கோரி ஆயிரம் கிலோமீற்றர் நடைபயணத்தை மேற்கொண்ட இலங்கை தமிழர் அவுஸ்திரேலியா வழங்கிய இனிப்பான செய்தி samugammedia அவுஸ்திரேலியாவில் நிரந்தர விசாவை கோரி பலரட்டிலிருந்து சிட்னியில் பிரதமர் அலுவலகம் வரை நடைபயணத்தை மேற்கொண்ட இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் நெய்ல்  பராவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவுஸ்திரேலியா நிரந்தர விசா வழங்கியுள்ளது.பிரிட்ஜிங் விசாவினால் சிக்குண்டுள்ள அகதிகளிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் நியாயமான பதிலை வழங்கவேண்டும் என கோரி நெய்ல் பரா நடைபயணத்தை மேற்கொண்டிருந்தார்அவர் அவுஸ்திரேலியாவில் தனது குடும்பத்தவர்களுடன்  பிரிட்ஜிங் விசாவில் வசித்துவருகின்றார்.பரா தனது நடைபயணத்தை முடிவை நெருங்கிக்கொண்டிருந்தவேளை விசா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது - சட்டத்தரணி கரினா போர்ட் இதனை தெரிவித்துள்ளார்.நான் மகிழ்ச்சியும் நன்றியும் உடையவனுமாக உள்ளேன் என பரா தெரிவித்துள்ளார்.நன்றி அவுஸ்திரேலியா இது எனது நாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.2012 இல் படகு மூலம் அவுஸ்திரேலியா வந்த பரா தனது மனைவி இரண்டு பிள்ளைகளுடன் பாதுகாப்பு கோரியிருந்தார்.நாங்கள் அனைவரும் ஒருநாள் விடுதலையாவோம் என நம்புகின்றோம் நாங்கள் அவுஸ்திரேலியாவிற்கு பங்களிப்பு செய்வோம் என உறுதியளிக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement