• Nov 23 2024

இலங்கை யுத்த குற்றவாளிகளை தடை? பிரித்தானியா நாடாளுமன்றில் விவாதம் samugammedia

Chithra / Dec 2nd 2023, 10:25 am
image

 

இனப்படுகொலைக்கு காரணமான இலங்கைப் போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்வது பற்றி கலந்துரையாட பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 05.12.2023 மாலை 2.30 மணிமுதல் 90 நிமிடங்களுக்கு நாடாளுமன்றின் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கத்தில்  நடைபெறவுள்ளது.

இலங்கை முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரத்தின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி, இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த 2020 காலப்பகுதியில் இருந்து ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தன.

அத்துடன் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோரும் சித்தரவதையால் பாதிக்கப்பட்டோரும் ஒன்றிணைந்து சவேந்திர சில்வாவை தடைசெய்யும் முயற்சிக்கு சர்வதேச ஆதரவை திரட்டும் நோக்கில் பல்வேறு வழிகளில் இப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.


கடந்த ஏப்ரல் 2021 இல் சர்வதேச மனித உரிமை அமைப்பான ITJP சவேந்திர சில்வாவின் யுத்தக்குற்றங்களிற்கான ஆதாரங்களை உள்ளடக்கிய 50 பக்க அறிக்கை ஒன்றினை பிரித்தானிய அரசிடம் சமர்ப்பித்து அவரை தடை செய்யும்படி கோரியிருந்தது.

இது போல மே மற்றும் யூன் 2021 இல் ICPPG இலங்கையில் 2019 முதல் 2021 வரை சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழ் இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்ட 200 இற்கு மேற்பட்டவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து தொடரும் சித்திரவதைகளிற்கு காரணமான சவேந்திர சில்வா பிரித்தானிய அரசினால் தடை செய்யப்பட வேண்டுமென கோரியிருந்தமையையும் குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் முயற்சியில், பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் மற்றும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஆகியோர் ஒருங்கிணைக்கப்பட்டு, தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உயர்மட்ட அரசில் தலைவர்களையும் தொடர்பு கொண்டு, தொடர் இராஜதந்திர சந்தப்புக்களை நடாத்தி, இந்த பிரச்சாரத்துக்கு ஆதரவு தேடி வருவதுடன், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு அழுத்தம் வழங்கும் படி வலியுறுத்தி வருகின்றனர்.

இலங்கை யுத்த குற்றவாளிகளை தடை பிரித்தானியா நாடாளுமன்றில் விவாதம் samugammedia  இனப்படுகொலைக்கு காரணமான இலங்கைப் போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்வது பற்றி கலந்துரையாட பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எதிர்வரும் 05.12.2023 மாலை 2.30 மணிமுதல் 90 நிமிடங்களுக்கு நாடாளுமன்றின் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கத்தில்  நடைபெறவுள்ளது.இலங்கை முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரத்தின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி, இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த 2020 காலப்பகுதியில் இருந்து ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தன.அத்துடன் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோரும் சித்தரவதையால் பாதிக்கப்பட்டோரும் ஒன்றிணைந்து சவேந்திர சில்வாவை தடைசெய்யும் முயற்சிக்கு சர்வதேச ஆதரவை திரட்டும் நோக்கில் பல்வேறு வழிகளில் இப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.கடந்த ஏப்ரல் 2021 இல் சர்வதேச மனித உரிமை அமைப்பான ITJP சவேந்திர சில்வாவின் யுத்தக்குற்றங்களிற்கான ஆதாரங்களை உள்ளடக்கிய 50 பக்க அறிக்கை ஒன்றினை பிரித்தானிய அரசிடம் சமர்ப்பித்து அவரை தடை செய்யும்படி கோரியிருந்தது.இது போல மே மற்றும் யூன் 2021 இல் ICPPG இலங்கையில் 2019 முதல் 2021 வரை சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழ் இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்ட 200 இற்கு மேற்பட்டவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து தொடரும் சித்திரவதைகளிற்கு காரணமான சவேந்திர சில்வா பிரித்தானிய அரசினால் தடை செய்யப்பட வேண்டுமென கோரியிருந்தமையையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் முயற்சியில், பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் மற்றும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஆகியோர் ஒருங்கிணைக்கப்பட்டு, தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உயர்மட்ட அரசில் தலைவர்களையும் தொடர்பு கொண்டு, தொடர் இராஜதந்திர சந்தப்புக்களை நடாத்தி, இந்த பிரச்சாரத்துக்கு ஆதரவு தேடி வருவதுடன், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு அழுத்தம் வழங்கும் படி வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement