• Nov 25 2024

ஒரு வேளை உணவைக் கூட பெற முடியாத நிலையில் இலங்கை மக்கள்! - மைத்திரி ஆதங்கம்

Chithra / Feb 9th 2024, 3:36 pm
image

 

இந்த நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடுவதாகவும் கொழும்பிலும் அவ்வாறானவர்கள் இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மூன்று வேளையில் ஒரு வேளை உணவைக் கூட பெற முடியாத மக்கள் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலன்னறுவை மாவட்டத்திலும் இவ்வாறானவர்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, உணவு உற்பத்தியை அதிகரிப்பதே முதன்மையாக செய்யப்பட வேண்டும் எனவும், 

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காமல் உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியாது எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டின் வருமான ஏற்றத்தாழ்வு குறைக்கப்பட வேண்டும், விசேட நீதிமன்றத்தை நியமித்து மத்திய வங்கி குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

அவை விசாரணைகள் இன்று நடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காட்டு யானைகளின் சனத்தொகை இன்று விவசாயிகளுக்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், அதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஒரு வேளை உணவைக் கூட பெற முடியாத நிலையில் இலங்கை மக்கள் - மைத்திரி ஆதங்கம்  இந்த நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடுவதாகவும் கொழும்பிலும் அவ்வாறானவர்கள் இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.மூன்று வேளையில் ஒரு வேளை உணவைக் கூட பெற முடியாத மக்கள் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பொலன்னறுவை மாவட்டத்திலும் இவ்வாறானவர்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.எனவே, உணவு உற்பத்தியை அதிகரிப்பதே முதன்மையாக செய்யப்பட வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காமல் உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியாது எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.நாட்டின் வருமான ஏற்றத்தாழ்வு குறைக்கப்பட வேண்டும், விசேட நீதிமன்றத்தை நியமித்து மத்திய வங்கி குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.அவை விசாரணைகள் இன்று நடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.காட்டு யானைகளின் சனத்தொகை இன்று விவசாயிகளுக்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், அதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement