• Apr 30 2024

முழு உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த இலங்கையின் சமையல் வல்லுநர்கள் - குவியும் பாராட்டுக்கள்

harsha / Dec 3rd 2022, 11:31 am
image

Advertisement

2022 ஆம் ஆண்டுக்கான  உலக சமையல் போட்டியில்,  இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பதினொரு இலங்கைச் சமையற்காரர்கள்(chef cook) 06 தங்கப் பதக்கங்கள், 06 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 09 வெண்கலப் பதக்கங்களை வென்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைம் ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தப் போட்டி, 55 நாடுகளைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர்.கடந்த  நவம்பர் 19 ஆம் திகதி  முதல்   லக்சம்பர்க்கில் போட்டிகள்  நடைபெற்றது.

இந்த போட்டியில் Hot Cooking and Pastry உணவு தயாரிப்பு போட்டிகளில் அதிக திறன்களை வெளிப்படுத்தியதாக இந்த இலங்கை செஃப் அணியின் தலைவர்  திமுத்து குமாரசிங்க விமான நிலையத்தில் தெரிவித்தார்.

மேலும், இந்த சாதனைகள் உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை இலங்கைக்கு ஈர்க்கும் என்பதால்,  சாதனைகள் எதிர்காலத்தில் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு உதவும் என்றும் அவர்  தெரிவித்தார்.

இந்த போட்டியை பிரதிநிதித்துவப்படுத்த இலங்கை சமையற்காரர்களில் Aitken Spence Hotel குழுமத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 07 சமையல்காரர்களும், Shangrila ஹோட்டலை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று சமையல்காரர்களும், Barros Hotel ஐ பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு சமையல்காரரும் கலந்துகொண்டனர்.

முழு உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த இலங்கையின் சமையல் வல்லுநர்கள் - குவியும் பாராட்டுக்கள் 2022 ஆம் ஆண்டுக்கான  உலக சமையல் போட்டியில்,  இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பதினொரு இலங்கைச் சமையற்காரர்கள்(chef cook) 06 தங்கப் பதக்கங்கள், 06 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 09 வெண்கலப் பதக்கங்களை வென்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைம் ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தப் போட்டி, 55 நாடுகளைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர்.கடந்த  நவம்பர் 19 ஆம் திகதி  முதல்   லக்சம்பர்க்கில் போட்டிகள்  நடைபெற்றது.இந்த போட்டியில் Hot Cooking and Pastry உணவு தயாரிப்பு போட்டிகளில் அதிக திறன்களை வெளிப்படுத்தியதாக இந்த இலங்கை செஃப் அணியின் தலைவர்  திமுத்து குமாரசிங்க விமான நிலையத்தில் தெரிவித்தார்.மேலும், இந்த சாதனைகள் உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை இலங்கைக்கு ஈர்க்கும் என்பதால்,  சாதனைகள் எதிர்காலத்தில் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு உதவும் என்றும் அவர்  தெரிவித்தார்.இந்த போட்டியை பிரதிநிதித்துவப்படுத்த இலங்கை சமையற்காரர்களில் Aitken Spence Hotel குழுமத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 07 சமையல்காரர்களும், Shangrila ஹோட்டலை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று சமையல்காரர்களும், Barros Hotel ஐ பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு சமையல்காரரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement