• May 17 2024

இலங்கையில் அழகுக்கலை துறை முற்றாக முடங்கும் நிலை!

Chithra / Jan 9th 2023, 7:09 am
image

Advertisement

இறக்குமதி கட்டுப்பாட்டால் அழகுசாதன பொருட்களை பெற்றுக் கொள்வதில் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகவும் அதன் காரணமாக எதிர்காலத்தில் அழகுக்கலை துறை முற்றாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அழகுக்கலை  நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜாக்கி அபோன்சு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,


பொருளாதார நெருக்கடி மற்றும் ரூபாவின் வீழ்ச்சி காரணமாக பல இறக்குமதி பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இவற்றுள் அழகு சாதனப் பொருட்களும் காணப்படுகின்றன.

அழகு துறையில் தற்போது பாரியதொரு பிரச்சினை எழுந்துள்ளது. வெளிநாடுகளிடம் இருந்து அழகு சாதனப் பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

முன்பு போல் வாடிக்கையாளர்கள் எம்மிடம் இல்லை. பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது. நாட்டில் கொள்வனவு செய்வதற்கு பொருட்களும் இல்லை. அவற்றின் விலைகள் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.


சர்வதேச தரத்திலான பொருட்களை பழகிக்கொண்டு உள்ளவர்கள் அதனையே எதிர்பார்த்துள்ளனர். எங்களுக்கு வரும் டொலர் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் இவ்வாறான உற்பத்திகள் செய்வதில்லை. மேலும் எதிர்காலத்தில் இந்த துறையில் முன்னேறி செல்வது என்பது சிரமமாகும். இதன் காரணமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டி ஏற்படும் பின்னர் அவர்களை நம்பி உள்ளவர்களின் கதி என்ன? அவர்களின் குடும்பம் பாதிக்கும் என்றார்.


இலங்கையில் அழகுக்கலை துறை முற்றாக முடங்கும் நிலை இறக்குமதி கட்டுப்பாட்டால் அழகுசாதன பொருட்களை பெற்றுக் கொள்வதில் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகவும் அதன் காரணமாக எதிர்காலத்தில் அழகுக்கலை துறை முற்றாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அழகுக்கலை  நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜாக்கி அபோன்சு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,பொருளாதார நெருக்கடி மற்றும் ரூபாவின் வீழ்ச்சி காரணமாக பல இறக்குமதி பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இவற்றுள் அழகு சாதனப் பொருட்களும் காணப்படுகின்றன.அழகு துறையில் தற்போது பாரியதொரு பிரச்சினை எழுந்துள்ளது. வெளிநாடுகளிடம் இருந்து அழகு சாதனப் பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.முன்பு போல் வாடிக்கையாளர்கள் எம்மிடம் இல்லை. பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது. நாட்டில் கொள்வனவு செய்வதற்கு பொருட்களும் இல்லை. அவற்றின் விலைகள் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.சர்வதேச தரத்திலான பொருட்களை பழகிக்கொண்டு உள்ளவர்கள் அதனையே எதிர்பார்த்துள்ளனர். எங்களுக்கு வரும் டொலர் நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் இலங்கையில் இவ்வாறான உற்பத்திகள் செய்வதில்லை. மேலும் எதிர்காலத்தில் இந்த துறையில் முன்னேறி செல்வது என்பது சிரமமாகும். இதன் காரணமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டி ஏற்படும் பின்னர் அவர்களை நம்பி உள்ளவர்களின் கதி என்ன அவர்களின் குடும்பம் பாதிக்கும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement