• May 04 2024

இலங்கை வேகமாக அதிகரித்த மாரடைப்பு! நாளொன்றுக்கு இத்தனை பேர் பாதிப்பா..! samugammedia

Chithra / Aug 22nd 2023, 9:03 am
image

Advertisement

நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 170 பேர் மாரடைப்பினால் பாதிக்கப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் விசேட நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த 10 வருடகாலமாக மாரடைப்பினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இது தற்போது உட்கொள்ளும் உணவு முறைமை காரணமாகவே ஏற்படுகின்றது.

சீனி மற்றும் எண்ணெய்யின் அளவு உணவில் அதிகரிப்பதனாலும் இந்த நிலைமை ஏற்படுகின்றது.

சிலர் மூன்று வேளையும் சோறு உட்கொள்கின்றனர்.இதுவும் பாரிய சிக்கலை ஏற்படுத்துகின்றது.

எனவே மக்கள் தாம் உட்கொள்ளும் உணவு குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும் என விசேட நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.


இலங்கை வேகமாக அதிகரித்த மாரடைப்பு நாளொன்றுக்கு இத்தனை பேர் பாதிப்பா. samugammedia நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 170 பேர் மாரடைப்பினால் பாதிக்கப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் விசேட நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் கடந்த 10 வருடகாலமாக மாரடைப்பினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.இது தற்போது உட்கொள்ளும் உணவு முறைமை காரணமாகவே ஏற்படுகின்றது.சீனி மற்றும் எண்ணெய்யின் அளவு உணவில் அதிகரிப்பதனாலும் இந்த நிலைமை ஏற்படுகின்றது.சிலர் மூன்று வேளையும் சோறு உட்கொள்கின்றனர்.இதுவும் பாரிய சிக்கலை ஏற்படுத்துகின்றது.எனவே மக்கள் தாம் உட்கொள்ளும் உணவு குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும் என விசேட நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement