• May 05 2024

சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு...! திண்டாடும் பட்டதாரிகள்...! samugammedia

Sharmi / Aug 22nd 2023, 8:56 am
image

Advertisement

சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர்.

குறிப்பாக புதியவர்களின் நிலைமை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

வேலை தேடும் சீன நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை அனுப்பியதாகவும் ஆனால் தான் தெரிவு செய்து படித்த சந்தை ஆராய்ச்சி துறையில் வேலை கிடைக்க
வில்லை எனவும் உளவியல் பட்டதாரியான ஜாங் என்பவர் கூறியுள்ளார்.

இவ்வாறான நிலைமையில்,பல்கலைக் கழகத்தில் படிக்கும் போதே வேலை தேடும் இளைஞர்களின் மனநிலை குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

பட்டப்படிப்புக்கு பின்னர் இளைஞர்கள் மீதான உளவியல் அழுத்தத்தை தான் அனுபவித்ததாக பீஜிங்கில் அண்மையில் நடந்த ஆட்சேர்ப்பு கண்காட்சியில் கலந்துக்கொண்ட ஜாங் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியுள்ளார். அவர் அனுப்பும் ஒவ்வொரு பத்து விண்ணப்பங்களுக்கு ஒரே பதிலே கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் வேலையின்மை அதிகரித்து வரும் சந்தர்ப்பத்தில் சீனாவின் வேலை சந்தையில் நுழையும் மில்லியன் கணக்கான பட்டதாரிகளில் ஜாங் என்பவரும் ஒருவர்.

16 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வேலையின்மை என்ற பிரச்னை ஜூன் மாதத்தில் 21.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், தமது நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதை உலகத்திற்கு தெரியப்படுத்தாமல் வயது அடிப்படையிலான வேலைவாய்ப்பு விபரங்களை வெளியிடுவதை நிறுத்தி வைப்பதாக சீன அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சீனாவில் அனுபவம் இல்லாத விண்ணப்பதாரிகளுக்கு வேலை கிடைப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது என பீஜிங்கில் நடைபெற்ற தொழில் கண்காட்சிகளில் கலந்து கொண்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய பீஜிங்கில் நடந்த வேலை வாய்ப்புக் கண்காட்சியில் விளம்பரங்களைப் பார்த்து ஏமாற்றம் அடைந்ததாக இளைஞர்கள் கூறியுள்ளனர்.கண்காட்சியில் கலந்துக்கொண்ட நிறுவனங்கள் விற்
பனை மற்றும் நிர்வாக வேலைகளை மட்டுமே வழங்குகின்றன.

அதுவும் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கான வேலைகளே வழங்கப்பட்டதா கவும் கண்காட்சியில் கலந்துக் கொண்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு. திண்டாடும் பட்டதாரிகள். samugammedia சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர்.குறிப்பாக புதியவர்களின் நிலைமை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.வேலை தேடும் சீன நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை அனுப்பியதாகவும் ஆனால் தான் தெரிவு செய்து படித்த சந்தை ஆராய்ச்சி துறையில் வேலை கிடைக்கவில்லை எனவும் உளவியல் பட்டதாரியான ஜாங் என்பவர் கூறியுள்ளார்.இவ்வாறான நிலைமையில்,பல்கலைக் கழகத்தில் படிக்கும் போதே வேலை தேடும் இளைஞர்களின் மனநிலை குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.பட்டப்படிப்புக்கு பின்னர் இளைஞர்கள் மீதான உளவியல் அழுத்தத்தை தான் அனுபவித்ததாக பீஜிங்கில் அண்மையில் நடந்த ஆட்சேர்ப்பு கண்காட்சியில் கலந்துக்கொண்ட ஜாங் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியுள்ளார். அவர் அனுப்பும் ஒவ்வொரு பத்து விண்ணப்பங்களுக்கு ஒரே பதிலே கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இளைஞர்கள் வேலையின்மை அதிகரித்து வரும் சந்தர்ப்பத்தில் சீனாவின் வேலை சந்தையில் நுழையும் மில்லியன் கணக்கான பட்டதாரிகளில் ஜாங் என்பவரும் ஒருவர். 16 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வேலையின்மை என்ற பிரச்னை ஜூன் மாதத்தில் 21.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.இந்த நிலையில், தமது நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதை உலகத்திற்கு தெரியப்படுத்தாமல் வயது அடிப்படையிலான வேலைவாய்ப்பு விபரங்களை வெளியிடுவதை நிறுத்தி வைப்பதாக சீன அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.சீனாவில் அனுபவம் இல்லாத விண்ணப்பதாரிகளுக்கு வேலை கிடைப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது என பீஜிங்கில் நடைபெற்ற தொழில் கண்காட்சிகளில் கலந்து கொண்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.மத்திய பீஜிங்கில் நடந்த வேலை வாய்ப்புக் கண்காட்சியில் விளம்பரங்களைப் பார்த்து ஏமாற்றம் அடைந்ததாக இளைஞர்கள் கூறியுள்ளனர்.கண்காட்சியில் கலந்துக்கொண்ட நிறுவனங்கள் விற்பனை மற்றும் நிர்வாக வேலைகளை மட்டுமே வழங்குகின்றன.அதுவும் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கான வேலைகளே வழங்கப்பட்டதா கவும் கண்காட்சியில் கலந்துக் கொண்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement