• Jan 19 2026

இலங்கையின் ‘லிட்டில் இங்கிலாந்து’ - கண்களை மயக்கும் மூடுபனியின் வைரல் காட்சிகள்

Aathira / Jan 17th 2026, 1:20 pm
image

இலங்கையின் ‘லிட்டில் இங்கிலாந்து’ என அழைக்கப்படும் நுவரெலியா பகுதியில் இன்று (17) காலை சில இடங்களில் துகள் உறைபனி பொழிவுடன் கூடிய குளிரான காலநிலை நிலவியது. 

இதனால் பல பகுதிகளில் உள்ள புல்வெளிகளில் பனி துகள்கள் படிந்து படர்ந்து காணப்பட்டன.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின்படி, இன்று நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலை 8.0 பாகை செல்சியஸ் என நுவரெலியா வானிலை மையத்தில் பதிவாகியுள்ளது.

அதேவேளை, அடுத்த 36 மணிநேரங்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், அதிகாலை நேரங்களில் மூடுபனி அல்லது பனி மூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையின் ‘லிட்டில் இங்கிலாந்து’ - கண்களை மயக்கும் மூடுபனியின் வைரல் காட்சிகள் இலங்கையின் ‘லிட்டில் இங்கிலாந்து’ என அழைக்கப்படும் நுவரெலியா பகுதியில் இன்று (17) காலை சில இடங்களில் துகள் உறைபனி பொழிவுடன் கூடிய குளிரான காலநிலை நிலவியது. இதனால் பல பகுதிகளில் உள்ள புல்வெளிகளில் பனி துகள்கள் படிந்து படர்ந்து காணப்பட்டன.வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின்படி, இன்று நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலை 8.0 பாகை செல்சியஸ் என நுவரெலியா வானிலை மையத்தில் பதிவாகியுள்ளது.அதேவேளை, அடுத்த 36 மணிநேரங்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், அதிகாலை நேரங்களில் மூடுபனி அல்லது பனி மூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement