• Jan 19 2026

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் காயம்

Aathira / Jan 17th 2026, 1:02 pm
image

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து நேற்று (16) இரவு பியகம பகுதியில், அசோக ரன்வலவின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர்.

களனி – பியகம வீதியில் தனது காரை வீட்டிற்குள் செலுத்த முயன்றபோது, களனி திசையிலிருந்து வந்த மற்றுமொரு கார் அவரது காரில் மோதியதாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து, பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் இரவு பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய மற்றைய காரின் சாரதி களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் எனவும், 

சம்பவ நேரத்தில் அவர் மது அருந்தியிருந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்த அசோக ரன்வலவின் மனைவி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் காயம் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்து நேற்று (16) இரவு பியகம பகுதியில், அசோக ரன்வலவின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர்.களனி – பியகம வீதியில் தனது காரை வீட்டிற்குள் செலுத்த முயன்றபோது, களனி திசையிலிருந்து வந்த மற்றுமொரு கார் அவரது காரில் மோதியதாக கூறப்படுகிறது.விபத்து குறித்து, பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் இரவு பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.விபத்தை ஏற்படுத்திய மற்றைய காரின் சாரதி களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் எனவும், சம்பவ நேரத்தில் அவர் மது அருந்தியிருந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.குறித்த விபத்தில் காயமடைந்த அசோக ரன்வலவின் மனைவி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

Advertisement

Advertisement