• Jan 19 2026

இலங்கையில் 13.9 சதவீத கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு.! முக்கிய காரணங்களை சுட்டிக் காட்டிய வைத்தியர்

Aathira / Jan 17th 2026, 12:57 pm
image

இலங்கையில் சுமார் 13.9 சதவீத தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுவதாக, இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் மற்றும் நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பியியல் ஆலோசகர் வைத்தியர் மணில்கா சுமனதிலக தெரிவித்துள்ளார்.

கர்ப்பத்திற்கு முன்பு அதிக எடை அல்லது உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் கர்ப்பகால நீரிழிவுக்கான முக்கிய காரணங்களாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், பிற்காலத்தில் நீரிழிவு உள்ளிட்ட தொற்றாத நோய்களுக்கு அதிக அபாயத்தில் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

அதிக எடை அல்லது பருமனான பெண்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மூலம் கர்ப்பத்திற்கு முன்பே உடல் எடையை 7 முதல் 10 சதவீதம் வரை குறைத்தால், 

இந்த ஆபத்தை கணிசமாகக் குறைக்க முடியும் எனவும்  வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் 13.9 சதவீத கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு. முக்கிய காரணங்களை சுட்டிக் காட்டிய வைத்தியர் இலங்கையில் சுமார் 13.9 சதவீத தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுவதாக, இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் மற்றும் நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பியியல் ஆலோசகர் வைத்தியர் மணில்கா சுமனதிலக தெரிவித்துள்ளார்.கர்ப்பத்திற்கு முன்பு அதிக எடை அல்லது உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் கர்ப்பகால நீரிழிவுக்கான முக்கிய காரணங்களாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.மேலும் கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், பிற்காலத்தில் நீரிழிவு உள்ளிட்ட தொற்றாத நோய்களுக்கு அதிக அபாயத்தில் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.அதிக எடை அல்லது பருமனான பெண்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மூலம் கர்ப்பத்திற்கு முன்பே உடல் எடையை 7 முதல் 10 சதவீதம் வரை குறைத்தால், இந்த ஆபத்தை கணிசமாகக் குறைக்க முடியும் எனவும்  வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement