• Jan 19 2026

திருமலையில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்

Aathira / Jan 17th 2026, 12:39 pm
image

திருகோணமலை  - வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்திற்குள் இன்று சனிக்கிழமை (17) அதிகாலை உற்பகுந்த காட்டு யானைகள் சேதங்களை விளைவித்துள்ளன.

இதன்போது 15 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை காட்டு யானைகள் அழித்துள்ளது.

அத்தோடு வீடொன்றும், அங்கிருந்த பொருட்களும் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த யானை தாக்குதலின் போது வீட்டில் இருந்தோர் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் தொடர்ச்சியாக தமது கிராமத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவது தொடர்பில் கவலை தெரிவித்து உள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் நடவடிக்கை மேற்கொண்டு யானை பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறும், பாதிக்கப்பட்ட தமக்கு நஷ்டஈட்டை பெற்றுத் தருமாறும் வெருகல் -உப்பூறல் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருமலையில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் திருகோணமலை  - வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்திற்குள் இன்று சனிக்கிழமை (17) அதிகாலை உற்பகுந்த காட்டு யானைகள் சேதங்களை விளைவித்துள்ளன.இதன்போது 15 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை காட்டு யானைகள் அழித்துள்ளது.அத்தோடு வீடொன்றும், அங்கிருந்த பொருட்களும் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.இந்த யானை தாக்குதலின் போது வீட்டில் இருந்தோர் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.மேலும் தொடர்ச்சியாக தமது கிராமத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவது தொடர்பில் கவலை தெரிவித்து உள்ளனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் நடவடிக்கை மேற்கொண்டு யானை பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறும், பாதிக்கப்பட்ட தமக்கு நஷ்டஈட்டை பெற்றுத் தருமாறும் வெருகல் -உப்பூறல் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement