• Jan 19 2026

"லங்கா ரைட்" சுற்றுப்பயணம் - கண்டியில் முதல் கட்டம் நிறைவு

Aathira / Jan 17th 2026, 12:12 pm
image

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு ஏற்பாடு செய்த “லங்கா ரைட்” தேசிய ஈருருளி சவாரிப் போட்டியின் முதலாம் கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 

இந்தப் போட்டி நேற்று முற்பகல் 9 மணிக்கு கொழும்பு லேக் ஹவுஸ் வளாகம் முன்பாக உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. 

இப்போட்டித் தொடரில் மொத்தம் 27 அணிகள் பங்கேற்று வருகின்றன.

கொழும்பு–கண்டி பாதையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை இராணுவ அணியைச் சேர்ந்த எச்.டபிள்யூ.எம்.எஸ். பிந்து முதலிடத்தையும், ஏ.டி.எஸ். பெரேரா இரண்டாமிடத்தையும் பெற்றனர். 

இதன் இரண்டாம் கட்டம் இன்று கண்டி–அனுராதபுரம் வரை நடைபெறவுள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்று, அனுராதபுரத்தில் தொடங்கி மீண்டும் கொழும்பில் நிறைவடையவுள்ளது.

இலங்கையில் ஈருருளி ஓட்டப் போட்டிகளை ஊக்குவிப்பதோடு, இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த தேசிய போட்டித் தொடர் நடத்தப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

"லங்கா ரைட்" சுற்றுப்பயணம் - கண்டியில் முதல் கட்டம் நிறைவு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு ஏற்பாடு செய்த “லங்கா ரைட்” தேசிய ஈருருளி சவாரிப் போட்டியின் முதலாம் கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்தப் போட்டி நேற்று முற்பகல் 9 மணிக்கு கொழும்பு லேக் ஹவுஸ் வளாகம் முன்பாக உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. இப்போட்டித் தொடரில் மொத்தம் 27 அணிகள் பங்கேற்று வருகின்றன.கொழும்பு–கண்டி பாதையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை இராணுவ அணியைச் சேர்ந்த எச்.டபிள்யூ.எம்.எஸ். பிந்து முதலிடத்தையும், ஏ.டி.எஸ். பெரேரா இரண்டாமிடத்தையும் பெற்றனர். இதன் இரண்டாம் கட்டம் இன்று கண்டி–அனுராதபுரம் வரை நடைபெறவுள்ளது.நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்று, அனுராதபுரத்தில் தொடங்கி மீண்டும் கொழும்பில் நிறைவடையவுள்ளது.இலங்கையில் ஈருருளி ஓட்டப் போட்டிகளை ஊக்குவிப்பதோடு, இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த தேசிய போட்டித் தொடர் நடத்தப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement