• May 04 2024

2026ம் ஆண்டு வரை இலங்கைக்கு ஆபத்து - அதிகரிக்கும் வறுமை விகிதம்!

Chithra / Apr 23rd 2024, 12:28 pm
image

Advertisement

 

2026 ஆம் ஆண்டு வரை இலங்கையின் வறுமை விகிதம் 22 வீதத்தை விட அதிகரிக்கும் என உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 2.2 வீத மிதமான வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் நாடு இன்னும் அதிக அளவிலான வறுமை மற்றும் வருமான சமத்துவமின்மையை எதிர்கொள்வதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், இலங்கையில் வறுமை விகிதங்கள் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக அதிகரித்துள்ளதாகவும், 2023ஆம் ஆண்டில் 25.9 வீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு வரை நாட்டின் வறுமை விகிதம் 22 வீதத்தை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கியினால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026ம் ஆண்டு வரை இலங்கைக்கு ஆபத்து - அதிகரிக்கும் வறுமை விகிதம்  2026 ஆம் ஆண்டு வரை இலங்கையின் வறுமை விகிதம் 22 வீதத்தை விட அதிகரிக்கும் என உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 2.2 வீத மிதமான வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.எவ்வாறாயினும், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் நாடு இன்னும் அதிக அளவிலான வறுமை மற்றும் வருமான சமத்துவமின்மையை எதிர்கொள்வதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.அதேநேரம், இலங்கையில் வறுமை விகிதங்கள் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக அதிகரித்துள்ளதாகவும், 2023ஆம் ஆண்டில் 25.9 வீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு வரை நாட்டின் வறுமை விகிதம் 22 வீதத்தை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கியினால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement