• May 04 2024

தந்தைக்காக கட்டப்பட்ட பிரமாண்ட தாஜ்மகால் - யாழில் மகன் செய்த நெகிழ்ச்சி செயல்

Chithra / Apr 23rd 2024, 12:36 pm
image

Advertisement


யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, சுழிபுரம் கிழக்கு பகுதியில் இறையடி சேர்ந்த தனது தந்தைக்காக மகன் ஒருவர்  பிரமாண்டமான  நினைவாலயத்தை அமைந்துள்ளார்.

கந்தசாமி பகீரதன் என்பவரே தனது தந்தையான கந்தசாமிக்காக இந்த நினைவாலயத்தை அமைத்து அதற்கு கந்தக்கோட்டம் என பெயர் சூட்டியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு 04 ஆம் மாதம் 01 ஆம் திகதி  கந்தசாமி உயிரிழந்த நிலையில் அதற்கு அடுத்த வாரமே இந்த கட்டட நிர்மாணத்துக்கான  இந்த நினைவாலயத்திற்கான  அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்த நினைவாலயமானது தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஒரு வருடத்தில் பெரும்பாலான வேலைகள் செய்து முடித்த இருந்தாலும், நிதிப் பிரச்சினை காரணமாக அதனை முற்றுப்பெற வைக்க முடியாத நிலையில் மிகுதி வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. 

இந்த கட்டடக்கலையானது இந்திய கலைஞர்களால் கட்டப்பட்டது போன்று தோற்றமளித்தாலும் முற்றுமுழுதாக யாழ்ப்பாணம் - தொல்புரம் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களின் கை வண்ணத்திலேயே கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தந்தைக்காக கட்டப்பட்ட பிரமாண்ட தாஜ்மகால் - யாழில் மகன் செய்த நெகிழ்ச்சி செயல் யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, சுழிபுரம் கிழக்கு பகுதியில் இறையடி சேர்ந்த தனது தந்தைக்காக மகன் ஒருவர்  பிரமாண்டமான  நினைவாலயத்தை அமைந்துள்ளார்.கந்தசாமி பகீரதன் என்பவரே தனது தந்தையான கந்தசாமிக்காக இந்த நினைவாலயத்தை அமைத்து அதற்கு கந்தக்கோட்டம் என பெயர் சூட்டியுள்ளார்.கடந்த 2011 ஆம் ஆண்டு 04 ஆம் மாதம் 01 ஆம் திகதி  கந்தசாமி உயிரிழந்த நிலையில் அதற்கு அடுத்த வாரமே இந்த கட்டட நிர்மாணத்துக்கான  இந்த நினைவாலயத்திற்கான  அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.இந்த நினைவாலயமானது தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.இந்நிலையில் ஒரு வருடத்தில் பெரும்பாலான வேலைகள் செய்து முடித்த இருந்தாலும், நிதிப் பிரச்சினை காரணமாக அதனை முற்றுப்பெற வைக்க முடியாத நிலையில் மிகுதி வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்த கட்டடக்கலையானது இந்திய கலைஞர்களால் கட்டப்பட்டது போன்று தோற்றமளித்தாலும் முற்றுமுழுதாக யாழ்ப்பாணம் - தொல்புரம் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களின் கை வண்ணத்திலேயே கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement