• Nov 23 2024

இலங்கையின் அடக்குமுறை வரி நாட்டின் வளர்ச்சிக்கு பாதகமாக அமையும்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / May 21st 2024, 1:31 pm
image

 

இலங்கையின் தற்போதைய அடக்குமுறை வரி நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்  மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன் காரணமாக பல உள்ளூர் தொழில்முனைவோர் மற்றும் வணிகத்துறையினர் வெளிநாடுகளுக்கு தமது முயற்சிகளை இடமாற்றம் செய்கின்றனர் .


புதிய முதலீடுகளும் கணிசமாகக் குறைந்துள்ளதுடன் வரியமைப்பு ஓரளவுக்கு பொருளாதாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

ஏழைகளை அதிக ஆதரவற்றதாக ஆக்கியுள்ளதுடன் நடுத்தர வர்க்கத்தை வறுமையை நோக்கி செலுத்துகிறது.

எனவே இந்த வரி ஆட்சி, பொருளாதார வளர்ச்சிக்கு எதிர்மறையானது மற்றும் நீடிக்க முடியாதது. 

இந்த செயற்பாடு, அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு மேலாக இலங்கை 3 வீத வளர்ச்சிக்கும் மேல் செல்ல முடியாது.

ஆகவே, இந்த நிலைமையை சரிசெய்யப்பட வேண்டுமானால், வரிவிதிப்பு விகிதத்தை குறைக்கவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் அடக்குமுறை வரி நாட்டின் வளர்ச்சிக்கு பாதகமாக அமையும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை  இலங்கையின் தற்போதைய அடக்குமுறை வரி நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்  மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இதன் காரணமாக பல உள்ளூர் தொழில்முனைவோர் மற்றும் வணிகத்துறையினர் வெளிநாடுகளுக்கு தமது முயற்சிகளை இடமாற்றம் செய்கின்றனர் .புதிய முதலீடுகளும் கணிசமாகக் குறைந்துள்ளதுடன் வரியமைப்பு ஓரளவுக்கு பொருளாதாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது.ஏழைகளை அதிக ஆதரவற்றதாக ஆக்கியுள்ளதுடன் நடுத்தர வர்க்கத்தை வறுமையை நோக்கி செலுத்துகிறது.எனவே இந்த வரி ஆட்சி, பொருளாதார வளர்ச்சிக்கு எதிர்மறையானது மற்றும் நீடிக்க முடியாதது. இந்த செயற்பாடு, அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு மேலாக இலங்கை 3 வீத வளர்ச்சிக்கும் மேல் செல்ல முடியாது.ஆகவே, இந்த நிலைமையை சரிசெய்யப்பட வேண்டுமானால், வரிவிதிப்பு விகிதத்தை குறைக்கவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement