• Nov 25 2024

வன்னி தேர்தல் மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் சிறீரெலோ

Chithra / Oct 6th 2024, 10:12 am
image


கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் தமது கட்சி சொற்ப வாக்குகளால் ஆசனத்தை இழந்திருந்தது, எனினும் மக்கள் எமக்கு அன்று அளித்த வாக்கு எண்ணிக்கை வன்னியில் பெரும் வாக்கு வங்கி உள்ள கட்சியாக எம்மை உருவாக்கியது என்று சிறீரெலோ கட்சி தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது 

 குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,  

அன்பிற்கினிய எங்கள் உதிரத்தில் கலந்த வன்னிப் பெரு நிலப்பரப்பின் மக்களுக்கான அறிவித்தல் மாற்றத்திற்கான வன்னியில் சந்தர்ப்பத்தை தருமாறு கேட்கின்றோம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எமது கட்சியானது வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் இணைந்த வன்னி தேர்தல் தொகுதியில் தனித்து நின்று போட்டியிட போகின்றது என்பதை அறியத்தருகின்றோம்.

எம்மக்கள் வாக்களித்து வாக்களித்து வாக்கை பெற்றுச்சென்றவர்களால் ஏமாற்றம் அடைந்ததே மிச்சம், இந்நிலையில் இம்முறை பழையவர்கள் வேண்டாம் புதியவர்கள் வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் தெளிவாக உள்ளனர் என்பதை நாமும் அறிவோம். 

தனி ஒருவனாக எந்த ஒரு பதவியும் இன்றி தேர்தல்கள் தோல்வியிலும் மக்கள் அளித்த வாக்கு எண்ணிக்கையில் வெற்றியடைந்து, வாக்களித்த மக்களுக்காவும், வன்னி மக்களுக்காகவும் இன்றுவரை களத்தில் இருந்து போராடும் ஒருவர் , சோர்ந்து போகாமல், இருக்கும் நட்புரீதியான உறவுகளை வைத்துக்கொண்டு தன் இனம் சார்ந்தவர்களுக்கு தன்னால் முடிந்தளவு உதவிகளை இன்றுவரை செய்துவரும் ஒரேயொருவர், எமது செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்களின் தலைமையில் ஜனநாயக தேசிய கூட்டணி என்ற கட்சியினூடாக தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிட உள்ளோம் என்பதை அறியத்தருகின்றோம்

வன்னியின் மாற்றத்திற்காக எம்மை ஆதரித்து நாடாளுமன்றிற்கு அனுப்பி வைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் ஆசிகளுடன் எமது வெற்றிப்பயணத்தை ஆரம்பிக்கின்றோம் “வன்னியை மாற்றுவோம்” என்று அக்கட்சியின் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் சிறீரெலோ கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் தமது கட்சி சொற்ப வாக்குகளால் ஆசனத்தை இழந்திருந்தது, எனினும் மக்கள் எமக்கு அன்று அளித்த வாக்கு எண்ணிக்கை வன்னியில் பெரும் வாக்கு வங்கி உள்ள கட்சியாக எம்மை உருவாக்கியது என்று சிறீரெலோ கட்சி தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது  குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,  அன்பிற்கினிய எங்கள் உதிரத்தில் கலந்த வன்னிப் பெரு நிலப்பரப்பின் மக்களுக்கான அறிவித்தல் மாற்றத்திற்கான வன்னியில் சந்தர்ப்பத்தை தருமாறு கேட்கின்றோம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எமது கட்சியானது வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் இணைந்த வன்னி தேர்தல் தொகுதியில் தனித்து நின்று போட்டியிட போகின்றது என்பதை அறியத்தருகின்றோம்.எம்மக்கள் வாக்களித்து வாக்களித்து வாக்கை பெற்றுச்சென்றவர்களால் ஏமாற்றம் அடைந்ததே மிச்சம், இந்நிலையில் இம்முறை பழையவர்கள் வேண்டாம் புதியவர்கள் வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் தெளிவாக உள்ளனர் என்பதை நாமும் அறிவோம். தனி ஒருவனாக எந்த ஒரு பதவியும் இன்றி தேர்தல்கள் தோல்வியிலும் மக்கள் அளித்த வாக்கு எண்ணிக்கையில் வெற்றியடைந்து, வாக்களித்த மக்களுக்காவும், வன்னி மக்களுக்காகவும் இன்றுவரை களத்தில் இருந்து போராடும் ஒருவர் , சோர்ந்து போகாமல், இருக்கும் நட்புரீதியான உறவுகளை வைத்துக்கொண்டு தன் இனம் சார்ந்தவர்களுக்கு தன்னால் முடிந்தளவு உதவிகளை இன்றுவரை செய்துவரும் ஒரேயொருவர், எமது செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்களின் தலைமையில் ஜனநாயக தேசிய கூட்டணி என்ற கட்சியினூடாக தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிட உள்ளோம் என்பதை அறியத்தருகின்றோம்வன்னியின் மாற்றத்திற்காக எம்மை ஆதரித்து நாடாளுமன்றிற்கு அனுப்பி வைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் ஆசிகளுடன் எமது வெற்றிப்பயணத்தை ஆரம்பிக்கின்றோம் “வன்னியை மாற்றுவோம்” என்று அக்கட்சியின் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement