• Sep 19 2024

சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை குறைக்க நடவடிக்கை! டக்ளஸ் samugammedia

Chithra / May 3rd 2023, 1:48 pm
image

Advertisement

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இன்று (03-05-2023) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கூட்டத்தில், மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் அவை தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு புதிய முன்மொழிவுகளுக்கான அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்தின், செ.கஜேந்திரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர், பொலிஸார், இராணுவ அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை குறைக்க நடவடிக்கை டக்ளஸ் samugammedia கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இன்று (03-05-2023) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் இந்த கூட்டத்தில், மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் அவை தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு புதிய முன்மொழிவுகளுக்கான அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன.நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்தின், செ.கஜேந்திரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர், பொலிஸார், இராணுவ அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement