• May 20 2024

சபரிமலை யாத்திரை செல்லும் ஐய்யப்ப பக்தர்களுக்கு அறவிடப்படும் காப்புறுதி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை!

Tamil nila / Dec 10th 2022, 7:01 pm
image

Advertisement

இலங்கையில் இருந்து  சபரிமலை யாத்திரை செல்லும் ஐய்யப்ப பக்தர்களுக்கு அறவிடப்படும் 4000 ரூபா காப்புறுதி நிதியை 1000 ரூபாவாக குறைத்து அறவிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு விரைவில் சாதகமான முடிவுகள் கிடைக்கவுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.



சபரிமலை யாத்திரை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் இந்த விடயம் தொடர்பில்  எஸ்.ஆனந்தகுமாரின் கவனத்துக்கு கொண்டுவந்ததை தொடர்ந்து இதனை ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகராஜனின் கணத்துக்கு கொண்டுசென்ற  எஸ்.ஆனந்தகுமார், அவர் தலைமையில் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.


இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட எஸ்.ஆனந்தகுமார்,


இம்மாத இறுதியில் சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விசா கட்டணத்துக்கு மேலதிகமாக 4000 ரூபா காப்புறுதி நிதியும் செலுத்த வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. இந்த நிதியை குறைந்தளவில் (1000 ரூபா) அறவிட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் அலி சபரி, இந்திய உதவி உயர்ஸ்தானிகர், பௌத்த கலாசார திணைகளதின் செயலாளர் உட்பட உரிய தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.



பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதால் விரைவில் இதுதொடர்பிலான அறிவிப்பு வெளியாகும். இதேவேளை, வீசா சலுகைகளை வழங்குவது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


மேட்டுத்தெரு  ஸ்ரீராஐ ராஐராஐேஸ்வரி ஆலயத்தின் தலைவர் திருக்கேஷ்  செல்லசாமி, ரவீந்திரன் குருசாமி, ரவீந்திர குமார் குருசாமி உள்ளிட்டவர்களும் இந்து கலாசார திணைக்களத்தின் அதிகாரிகளும் இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டுள்ளனர். 

சபரிமலை யாத்திரை செல்லும் ஐய்யப்ப பக்தர்களுக்கு அறவிடப்படும் காப்புறுதி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை இலங்கையில் இருந்து  சபரிமலை யாத்திரை செல்லும் ஐய்யப்ப பக்தர்களுக்கு அறவிடப்படும் 4000 ரூபா காப்புறுதி நிதியை 1000 ரூபாவாக குறைத்து அறவிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு விரைவில் சாதகமான முடிவுகள் கிடைக்கவுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.சபரிமலை யாத்திரை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் இந்த விடயம் தொடர்பில்  எஸ்.ஆனந்தகுமாரின் கவனத்துக்கு கொண்டுவந்ததை தொடர்ந்து இதனை ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகராஜனின் கணத்துக்கு கொண்டுசென்ற  எஸ்.ஆனந்தகுமார், அவர் தலைமையில் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட எஸ்.ஆனந்தகுமார்,இம்மாத இறுதியில் சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விசா கட்டணத்துக்கு மேலதிகமாக 4000 ரூபா காப்புறுதி நிதியும் செலுத்த வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. இந்த நிதியை குறைந்தளவில் (1000 ரூபா) அறவிட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் அலி சபரி, இந்திய உதவி உயர்ஸ்தானிகர், பௌத்த கலாசார திணைகளதின் செயலாளர் உட்பட உரிய தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதால் விரைவில் இதுதொடர்பிலான அறிவிப்பு வெளியாகும். இதேவேளை, வீசா சலுகைகளை வழங்குவது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.மேட்டுத்தெரு  ஸ்ரீராஐ ராஐராஐேஸ்வரி ஆலயத்தின் தலைவர் திருக்கேஷ்  செல்லசாமி, ரவீந்திரன் குருசாமி, ரவீந்திர குமார் குருசாமி உள்ளிட்டவர்களும் இந்து கலாசார திணைக்களத்தின் அதிகாரிகளும் இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement