• Jan 23 2025

சம்மாந்துறையில் திருடிச்செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு

Chithra / Jan 17th 2025, 10:29 am
image


 

ஜனவரி முதல் வாரத்தில் திருடிச்செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் குறிப்பிட்டனர்.

இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஜனவரி முதல் வாரத்தில் இடம்பெற்றுள்ளதுடன் திருடிச்செல்லப்பட்ட மோட்டார்  சைக்கிள் உரிமையாளரினால்   முறைப்பாடும் அன்றைய தினம்  மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய  விசாரணைகளை மேற்கொண்ட  சம்மாந்துறை பொலிஸார்  பொத்துவில் பிரதேசத்தில் குறித்த மோட்டார் சைக்கிள் உட்பட  சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

இன்று  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதுடன் களவாடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான  மோட்டார் சைக்கிள் உட்பட சந்தேக நபரான   கல்முனைக்குடி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபரையும்  கைது செய்துள்ளனர்.

 சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம். நௌபர்  வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது


சம்மாந்துறையில் திருடிச்செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு  ஜனவரி முதல் வாரத்தில் திருடிச்செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் குறிப்பிட்டனர்.இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஜனவரி முதல் வாரத்தில் இடம்பெற்றுள்ளதுடன் திருடிச்செல்லப்பட்ட மோட்டார்  சைக்கிள் உரிமையாளரினால்   முறைப்பாடும் அன்றைய தினம்  மேற்கொள்ளப்பட்டிருந்தது.குறித்த முறைப்பாட்டிற்கமைய  விசாரணைகளை மேற்கொண்ட  சம்மாந்துறை பொலிஸார்  பொத்துவில் பிரதேசத்தில் குறித்த மோட்டார் சைக்கிள் உட்பட  சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.இன்று  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதுடன் களவாடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான  மோட்டார் சைக்கிள் உட்பட சந்தேக நபரான   கல்முனைக்குடி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபரையும்  கைது செய்துள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம். நௌபர்  வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement